ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நாளைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

SKY
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நாளை நவம்பர் 23-ஆம் தேதி முதல் டிசம்பர் 03-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டி நாளை நவம்பர் 23-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்த வேளையில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

மேலும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமணன் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளைய இந்த முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்த உத்தேச பட்டியலை இங்கு காணலாம்.

அந்த வகையில் சூரியகுமார் யாதவ் தலைமையில் இடம் பெற்றுள்ள 15 வீரர்களில் துவக்க வீரர்களாக விளையாட ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு அதிகப்படியான வாய்ப்பு உள்ளது. மூன்றாவது இடத்தில் இஷான் கிஷனும், நான்காவது இடத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவும் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. அதேபோன்று ஐந்தாவது இடத்தில் திலக் வர்மாவும், ஆறாவது இடத்தில் பினிஷராக ரிங்கு சிங்கும் விளையாட வாய்ப்புள்ளது.

- Advertisement -

ஆல்ரவுண்டர்களாக ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் விளையாட அதிக வாய்ப்புள்ளது. அதன்படி நாளைய ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததுக்கு அவங்க 2 பேர் தான் காரணமாம் – வெளியான தகவல்

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) இஷான் கிஷன், 4) சூரியகுமார் யாதவ், 5) திலக் வர்மா, 6) ரிங்கு சிங், 7) வாஷிங்க்டன் சுந்தர், 8) அக்சர் படேல், 9) அர்ஷ்தீப் சிங், 10) பிரசித் கிருஷ்ணா, 11) முகேஷ் குமார்.

Advertisement