சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததுக்கு அவங்க 2 பேர் தான் காரணமாம் – வெளியான தகவல்

Sanju-Samson
Advertisement

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. எதிர்வரும் நவம்பர் 23-ஆம் தேதி இந்தியாவில் துவங்கும் இந்து டி20 தொடரானது டிசம்பர் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உலகக்கோப்பை தொடருக்கு பின்னதாக நடைபெறும் இந்த தொடரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் முன்னணி சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டு சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட அணிக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சீனாவில் நடைபெற்ற ஏசியன் கேம்ஸ் தொடரில் பங்கேற்று தங்கப் பதக்கத்தை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த பலருக்கும் இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இவ்வேளையில் சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக கேரளாவை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது அனைவரது மத்தியிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.

ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் தனது இடத்திற்காக போராடிவரும் சஞ்சு சாம்சனுக்கு இதுபோன்ற தொடரிலாவது வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலரும் கூறிவரும் வேளையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த தொடரிலும் அவருக்கு இடம் கிடைக்காமல் போனது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இப்படி சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காமல் போவதற்கு காரணமே இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் தான் என்று கூறப்படுகிறது. ஏனெனில் தற்போது உள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கொடுக்க முடியாது என்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான முதல் தேர்வாக இஷான் கிஷன் இருப்பதனால் சாம்சனை எந்த இடத்தில் களமிறக்குவது என்று தெரியாமல் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : என்னய்யா சொல்றிங்க.. ஃபைனலில் இந்தியாவா இப்படி ஆடுனாங்க.. ஹர்பஜன் நம்ப முடியாத பேட்டி

மேலும் ரிஷப் பண்ட் குணமடைந்து வரும் வேளையில் கண்டிப்பாக அவர் நேரடியாக பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என்பதனால் இஷான் கிஷன் டாப் ஆர்டரில் ஒரு இடத்தை பிடித்துக் கொள்வார் என்பதனாலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தனது இடத்திற்காக போராடிவரும் சாம்சன் எவ்வளவுதான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அவரை தொடர்ச்சியாக தேர்வுக்குழு நிராகரித்து வருவதாக சுட்டிக்காட்டி ரசிகர்களும் தங்களது வருத்தத்தை சமூக வலைதள பக்கங்களில் மூலம் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement