என்னய்யா சொல்றிங்க.. ஃபைனலில் இந்தியாவா இப்படி ஆடுனாங்க.. ஹர்பஜன் நம்ப முடியாத பேட்டி

Harbhajan Singh 2
- Advertisement -

இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா 6வது முறையாக வென்றது. அதனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்வோம் என்று ஆசை ஆசையாக காத்திருந்த கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நெஞ்சங்கள் தூளானது. ஏனெனில் ரோகித் சர்மா தலைமையில் அசத்திய இந்தியா மாபெரும் ஃபைனலில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

இத்தனைக்கும் லீக் சுற்றில் இதே ஆஸ்திரேலியா உட்பட அனைத்து எதிரணிகளையும் தோற்கடித்த இந்தியா செமி ஃபைனலில் மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்தை வரலாற்றில் முதல் முறையாக வீழ்த்தியது. அதனால் நிச்சயமாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி ஃபைனலில் சொதப்பலாக விளையாடி பேட்டிங்கில் 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

நம்ப முடியல:
முன்னதாக அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 47 (26) ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் கில் மற்றும் ஸ்ரேயாஸ் அவுட்டானதால் ஆரம்பத்திலேயே ஏற்பட்ட அழுத்தத்தை சரி செய்ய நிதானமாக விளையாடிய விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் கடைசி வரை அப்படியே விளையாடி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் சூரியகுமார் மற்றும் ஜடேஜாவும் ஏமாற்றத்தை கொடுத்ததால் இந்தியா 250 ரன்களை கூட எடுக்கவில்லை. அதை விட இத்தொடர் முழுவதும் அடித்து நொறுக்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் ஃபைனலில் 11 – 50 வரையிலான கடைசி 40 ஓவர்களில் வெறும் 4 பவுண்டரிகள் மட்டுமே அடித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே தோல்விக்கு முக்கிய காரணமானது.

- Advertisement -

இந்நிலையில் 40 ஓவர்களில் 4 பவுண்டரிகள் மட்டுமே இந்தியா அடித்தது என்ற புள்ளி விவரத்தை நம்ப முடியவில்லை என ஹர்பஜன் சிங் சமீபத்திய பேட்டியில் ஏமாற்றமாக பேசியது பின்வருமாறு. “அங்கே தான் போட்டியும் மாறியது. நான் எப்போதும் 40 ஓவரில் வெறும் 4 பவுண்டரிகள் மட்டும் அடித்த போட்டியை பார்த்ததில்லை. 10 – 50 ஓவர்கள் வரை இந்தியா 4 பவுண்டரிகள் மட்டுமே அடித்தது என்பதை திரும்பிப் பார்க்கும் போது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது”

இதையும் படிங்க: வரலாற்றில் முதல் முறையாக இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டி20 தொடர்.. அட்டவணை விவரம்

“அந்த சமயங்களில் அழுத்தம் இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த நேரங்களில் பவுண்டரி அடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இல்லை. மாறாக கடைசியில் பார்த்துக் கொள்ளலாம் என்று மெதுவாக விளையாடினார்கள். பொதுவாக ஃபைனலில் நீங்கள் முன்னோக்கி நடக்க வேண்டும். ஆனால் ரோஹித் அவுட்டானதும் போட்டி முற்றிலுமாக மாறிவிட்டது. 40 ஓவரில் வெறும் 4 பவுண்டரிகள். இதை என்னால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை. ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் ரிஸ்க் எடுக்காமலேயே சீரான இடைவெளியில் பவுண்டரிகள் அடிக்க முடியும்” என்று கூறினார்.

Advertisement