வரலாற்றில் முதல் முறையாக இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டி20 தொடர்.. அட்டவணை விவரம்

IND vs AFG
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை சொந்த மண்ணில் வென்று சரித்திரம் படைக்கும் வாய்ப்பை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா கோட்டை விட்டது. குறிப்பாக மாபெரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் சுமாராக விளையாடி வெறும் 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை பதிவு செய்த இந்தியா 2011 போல கோப்பையை வெல்வோம் என்று காத்துக் கொண்டிருந்த கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை நொறுக்கியது.

அந்த வகையில் கடந்த 2013க்குப்பின் தொடர்ந்து 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை சொந்த மண்ணில் கூட நிறுத்த முடியாமல் இந்தியா மண்ணை கவ்வியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் தோல்வியே வெற்றிக்கான முதல் படி என்பதை 10 வருடங்களாக பார்த்து வரும் இந்தியா அடுத்ததாக அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் தொடர்:
வரும் அக்டோபர் 23 முதல் நடைபெறும் அத்தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் சூரியகுமார் யாதவ் தலைமையில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற அடுத்த தலைமுறை இளம் படையுடன் ஆஸ்திரேலியாவை சந்திக்க இந்தியா தயாராகி வருகிறது. குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணமாக இந்த தொடர் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. வரும் 2024 ஜனவரி 11ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் துவங்கும் இத்தொடரின் 2வது போட்டி ஜனவரி 14ஆம் தேதி இந்தூரில் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 3வது போட்டி ஜனவரி 17ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் நிலையில் இந்த 3 போட்டிகளும் இரவு நேரத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

சொல்லப்போனால் ஆசிய கோப்பை, டி20 மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையை தவிர்த்து வரலாற்றிலேயே ஒரு வெள்ளைப்பந்து இருதரப்பு தொடரில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுவது இதுவே முதல் முறையாகும். மேலும் இந்திய மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து போன்ற அணிகளை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் தங்களை கத்துக்குட்டி அல்ல என்பதை நிரூபித்து அனைவரது பாராட்டுகளை அள்ளியது.

இதையும் படிங்க: வரலாற்றில் முதல் முறையாக இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டி20 தொடர்.. அட்டவணை விவரம்

குறிப்பாக இந்தியாவுக்கு அடுத்தபடியாக இத்தொடரில் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற அணிகளை விட 2வது சிறந்த ஆசிய அணியாக ஆப்கானிஸ்தான் செயல்பட்டதாக நிறைய முன்னாள் வீரர்கள் பாராட்டினர். எனவே நல்ல வளர்ச்சியை கண்டுள்ள ஆப்கானிஸ்தான் விரைவில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொள்வது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement