அவரையே சிக்ஸர் அடிச்சுட்டாரா சூப்பர் ! அவரை விட பெஸ்ட், ரசிகர்களுக்கு பெருமை சேர்த்த இளம் தமிழக வீரர்

Sai Sudharsan
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 3-ஆம் தேதி நடைபெற்ற 48-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் சந்தித்தன. நவி மும்பையில் நடைபெற்ற அப்போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் 5-வது வெற்றியை பதிவு செய்து 5-வது இடத்திற்கு முன்னேறியது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த குஜராத் பஞ்சாப் அணியின் அதிரடியான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 143/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Bhanuka Rajapaksa

- Advertisement -

அதை தொடர்ந்து 144 என்ற சுலபமான இலக்கைத் துரத்திய பஞ்சாப்புக்கு தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 1 ரன்னில் அவுட்டாகி நடையை கட்டினாலும் அடுத்து ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் மற்றும் பனுக்கா ராஜபக்சா ஆகியோர் 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்தனர். இதில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 40 (28) ரன்கள் எடுத்து ராஜபக்சா அவுட்டாக மறுபுறம் அதிரடி காட்டிய ஷிகர் தவான் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 62* (53) ரன்கள் எடுத்து வெற்றியை மேலும் உறுதி செய்தார்.

தடுமாறிய குஜராத்:
இறுதியில் வெற்றிக்கு 30 பந்துகளில் 26 ரன்கள் தேவைப்பட்ட போது முகமது சமி வீசிய ஒரே ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் உட்பட 6, 6, 6, 4, 2, 4 என 28 ரன்களை தெறிக்கவிட்ட லியாம் லிவிங்ஸ்டன் 30* (10) ரன்களை குவித்து அபார பினிஷிங் கொடுத்ததால் 16 ஓவர்களிலேயே 145/2 ரன்கள் எடுத்த பஞ்சாப் அதிரடியான வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய ரபாடா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மறுபுறம் பங்கேற்ற 10 போட்டிகளில் 2-வது தோல்வியை பதிவு செய்தாலும் 8 வெற்றிகளால் குஜராத் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Liam Livinstone Six

முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்டிக் பாண்டியா முதலில் பேட்டிங் செய்த அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தொடக்க வீரர் சுப்மன் கில் 9 (6) ரன்களில் ரன் அவுட்டாதும் தமிழக இளம் வீரர் சாய் சுதர்சன் களமிறங்கினார். ஆனால் எதிர்புறம் சஹா 21 (17) கேப்டன் ஹர்டிக் பாண்டியா 1 (7), டேவிட் மில்லர் 11 (14), ராகுல் திவாடியா 11 (13), ரசித் கான் 0 (1) என அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் வரிசையாக சீரான இடைவெளியில் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி சென்றனர்.

- Advertisement -

காப்பாற்றிய சுதர்சன்:
இருப்பினும் அத்தனை சரிவுக்கும் வளைந்து கொடுக்காமல் மறுபுறம் நங்கூரமாக நின்று மூழ்கிக்கொண்டிருந்த குஜராத்தை முடிந்த அளவுக்கு முழு மூச்சுடன் தூக்கி நிறுத்த முயன்ற தமிழகத்தின் சாய் சுதர்சன் அற்புதமாக பேட்டிங் செய்து 5 பவுண்டரி 1 சிக்சருடன் அரைசதம் கடந்து 65* (50) ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் நின்றார். அவர் பொறுப்புடனும் அதிரடியாகவும் பேட்டிங் செய்யாமல் போயிருந்தால் குஜராத் நிச்சயம் 100 ரன்களைக் கூட தாண்டாமல் ஆல் அவுட்டாகியிருக்கும்.

அந்த வகையில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத்தின் மானத்தை ஓரளவு காப்பாற்றி தமிழனாய் சாய் சுதர்சன் தமிழ்நாட்டுக்கும் தமிழக ரசிகர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை. இந்த வருடம் ஐபிஎல் தொடரின் கடைசி கட்ட ஓவர்களில் ஜஸ்பிரித் பும்ரா (8.12) புவனேஸ்வர் குமார் (8.58) போன்றவர்களை விட 7.20 என்ற துல்லியமான எக்கனாமியில் பந்து வீசும் பஞ்சாப்பின் இளம் வீரர் அர்ஷிதீப் சிங் இதுவரை ஒரு சிக்சர் கூட எதிரணிக்கு வழங்காமல் இருந்தார்.

- Advertisement -

ஆனால் அப்படிப்பட்ட தரமான பவுலர் வீசிய பந்தில் நேற்று சிக்ஸர் அடித்த முதல் பேட்ஸ்மேனாக சாய் சுதர்சன் அசத்தலாக பேட்டிங் செய்தது உண்மையாகவே அவரின் திறமைக்கு ஒரு சான்றாகும்.

அவரை விட பெஸ்ட்:
மேலும் ஆல்ரவுண்டர் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு சில வருடங்களாகவே மோசமாக செயல்பட்டு வரும் மற்றொரு சீனியர் தமிழக வீரர் விஜய் சங்கர் இந்த வருட ஐபிஎல் தொடரில் குஜராத் அணி வழங்கிய அனைத்து வாய்ப்புகளிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி நடையை கட்டியது தமிழக ரசிகர்களையே கோபமடைய வைத்தது.

இதையும் படிங்க : துணையா தல தோனி இருப்பாரு, பயம் வேண்டாம் – இளம் வீரருக்கு தீபக் சஹர் கொடுத்த அட்வைஸ் இதோ

அந்த நிலைமையில் அவர் பேட்டிங் செய்த அதே 3-வது இடத்தில் அவரை விட குறைவான அனுபவம் பெற்ற சுதர்சன் இதுவரை 35 (30), 11 (9), 20 (14), 65* (50) என சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால் விஜய் சங்கரை விட சுதர்சன் எவ்வளவோ பரவாயில்லை என்று தமிழக ரசிகர்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.

Advertisement