நாம நாலு அடி அடிச்சா.. நமக்கு ஒரு அடி விழத்தான் செய்யும்.. ஆர்.சி.பி அணிக்கெதிரான தோல்வி குறித்து – கம்மின்ஸ் ஒப்புதல்

Cummins
- Advertisement -

ஹைதராபாத் நகரின் ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் போட்டியில் விளையாடிய சன்ரைசஸ் அணியானது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய வேளையில் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. மேலும் இந்த தோல்வியின் மூலம் தற்போது 10 புள்ளிகளுடன் சன் ரைசர்ஸ் அணி மூன்றாவது இடத்தினையும் பிடித்துள்ளது.

கடந்த பல போட்டிகளாகவே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சன்ரைசர்ஸ் அணி எளிதாக பெங்களூரு அணியை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது 171 ரன்களை மட்டுமே குவித்ததால் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் :

இன்றைய இரவு எங்களுக்கான இரவாக அமையவில்லை. பந்துவீச்சில் சில ஓவர்களில் நாங்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம். அதேபோன்று பேட்டிங்கிலும் அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை துவக்கத்திலேயே இழந்ததால் எங்களால் இலக்கை நோக்கி வெற்றிகரமாக செல்ல முடியாமல் போனது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்தால் எங்களால் நிறைய ரன்களை அடிக்க முடிகிறது. அந்த ட்ரிக் தான் எங்களது அணிக்கு வேலையும் செய்கிறது. ஆரம்பத்தில் சில வெற்றிகளை பெறுவதற்கு முன்னதாக நாங்கள் முதலில் பந்து வீசினால் வெற்றி பெறுவோம் என்று நம்பி இருந்தோம். ஆனால் அது எங்கள் வழியில் செல்லவில்லை. அதன் பின்னர் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்று வந்தோம்.

இதையும் படிங்க : கால்குலேட்டரை கையிலெடுத்த ஆர்சிபி ரசிகர்கள்.. பெங்களூரு அணி பிளே ஆஃப் செல்ல வாய்ப்பிருக்கா?

இந்நிலையில் தற்போது மீண்டும் தோல்வியை தழுவியது வருத்தம் அளிக்கிறது. டி20 கிரிக்கெட்டில் எந்த ஒரு அணியுமே தொடர்ச்சியாக அனைத்து போட்டியிலும் வெற்றி பெற முடியாது. இருந்தாலும் இந்த அணி எங்களுடைய வலுவான அணியாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த குறைகளை நீக்கிவிட்டு நாங்கள் நிச்சயம் வெற்றி பாதைக்கு திரும்பவும் என கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement