கால்குலேட்டரை கையிலெடுத்த ஆர்சிபி ரசிகர்கள்.. பெங்களூரு அணி பிளே ஆஃப் செல்ல வாய்ப்பிருக்கா?

RCB vs SRH
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற்ற 41வது லீக் போட்டியில் வலுவான ஹைதராபாத்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்தப்போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக விராட் கோலி 51, ரஜத் படிடார் 50 ரன்கள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் 1, ஐடன் மார்க்ரம் 7, ஹென்றிச் க்ளாஸென் 7 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 31, சபாஷ் அஹ்மத் 40* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் ஹைதராபாத் 171/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக ஸ்வப்னில் சிங், கரண் ஷர்மா, கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

பிளே ஆஃப் செல்லுமா:
அதனால் 30 நாட்கள் கழித்து 6 தொடர் தோல்விகளை நிறுத்தியுள்ள பெங்களூரு தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன் காரணமாக பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா என்பதை கண்டறிவதற்காக ஆர்சிபி ரசிகர்கள் மீண்டும் கால்குலேட்டரை கையில் எடுத்துள்ளனர்.

அதன் படி தற்போது 9 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்துள்ள பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு எஞ்சிய 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வெல்ல வேண்டும். அப்படி 5 வெற்றிகளை பெற்றால் 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்து கடைசி அணியாக பெங்களூரு ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு தற்போது டாப் 3 இடங்களில் உள்ள ராஜஸ்தான், கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய அணிகள் முறையே 22, 20, 20 புள்ளிகளுடன் தங்களுடைய லீக் சுற்றை முடிக்க வேண்டும்.

- Advertisement -

மறுபுறம் அந்த 3 அணிகளையும் பெங்களூரு தங்களுடைய கடைசி 5 போட்டிகளில் எதிர்கொள்ளவில்லை. எனவே அந்த 3 அணிகள் டாப் 3 இடங்களைப் பிடித்தால் பெங்களூருக்கு கடைசி 5 போட்டிகளில் வெல்லும் பட்சத்தில் 4வது அணியாக பிளே ஆஃப் செல்லலாம். ஒருவேளை 5 போட்டிகளில் பெங்களூரு 4 வெற்றிகளை மட்டும் பெற்றால் தற்போது 2 மற்றும் 3வது இடத்தில் உள்ள கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் அதனுடைய கடைசி 5 போட்டியில் 1 வெற்றி மட்டுமே பெற வேண்டும்.

இதையும் படிங்க: வெறும் 1 வெற்றி.. ஹைதராபாத் அணியின் வீக்னெஸை உடைத்த ஆர்சிபி.. சிஎஸ்கே ஃபாலோ பண்ணுமா?

அதே போல சென்னை மற்றும் லக்னோ அணிகள் அதனுடைய கடைசிக்கட்ட போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். அப்படி நடைபெறும் பட்சத்தில் லக்னோ சென்னை அணிகளை தொடர்ந்து நல்ல ரன் ரேட்டையும் கொண்டிருந்தால் பெங்களூரு 4வது அணியாக தகுதி பெறும். ஒருவேளை 5 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றால் பெங்களூரு அதிகாரப்பூர்வமாக வெளியேறி விடும்.

Advertisement