வெறும் 1 வெற்றி.. ஹைதராபாத் அணியின் வீக்னெஸை உடைத்த ஆர்சிபி.. சிஎஸ்கே ஃபாலோ பண்ணுமா?

SRH vs RCB 3
- Advertisement -

ஐபிஎல் 20204 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற்ற 41வது லீக் போட்டியில் ஹைதராபாத்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்கடித்தது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 207 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 51, ரஜப் படிதார் 50 ரன்கள் எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து சேசிங் செய்த ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் 1, ஐடன் மார்க்ரம் 7, ஹென்றிச் க்ளாஸென் 7, நிதிஷ் ரெட்டி 13 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதே போல காட்டுதனமாக அடித்த துவக்க வீரர் அபிஷேக் சர்மாவும் 31 (13) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்.

- Advertisement -

ஹைதெராபாத் பலவீனம்:
அதனால் 69/5 என சரிந்த ஹைதராபாத் அணிக்கு கடைசியில் சபாஷ் அகமது 40*, கேப்டன் பட் கமின்ஸ் 31 ரன்கள் எடுத்து போராடினர். இருப்பினும் 20 ஓவரில் அந்த அணியை 171/8 ரன்களுக்கு கட்டுப்படுத்திய பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக ஸ்வப்பனில் சிங், கேமரூன் கிரீன், கரண் சர்மா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 30 நாட்கள் கழித்து பெங்களூரு அணி தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்து நிம்மதியடைந்தது.

மறுபுறம் இந்த சீசனில் மும்பை, சிஎஸ்கே போன்ற எதிரணிகளை வெறித்தனமாக அடித்து நொறுக்கிய ஹைதராபாத் அணி இதே பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் குவித்தது. அத்துடன் டெல்லிக்கு எதிராக முதல் 5 ஓவரில் 100 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த ஹைதராபாத் கட்டுக்கடங்காமல் காட்டுதனமாக எதிரணிகளை அடித்து வந்தது. அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு தைரியமாக முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

ஆனால் பேட்டிங்கில் 207 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்ததால் மீண்டும் பெங்களூருவை அடித்து நொறுக்கி ஹைதெராபாத் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அழுத்தமான சேசிங்கில் நன்றாக பந்து வீசிய பெங்களூரு அணியிடம் பெட்டிப் பாம்பாக அடங்கிய ஹைதராபாத் இந்த வருடம் தங்களுடைய சொந்த ஊரில் முதல் தோல்வியை பதிவு செய்தது. இது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் ஹைதராபாத் அணி 14 முறை 200க்கும் மேற்பட்ட ரன்களை சேசிங் செய்துள்ளது.

இதையும் படிங்க: இன்னைக்கு தான் நாங்க நல்லா தூங்குவோம்.. சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான வெற்றி குறித்து – டூபிளெஸ்ஸிஸ் பேட்டி

ஆனால் அதில் நேற்றைய போட்டியையும் சேர்த்து 13 முறை தோல்வியை சந்தித்துள்ள ஹைதராபாத் வெறும் 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. அந்த வகையில் சேசிங் என்பது ஹைதராபாத் அணியின் பலவீனமாக இருப்பதை நேற்றைய போட்டியில் பெங்களூரு உடைத்து காண்பித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஹைதராபாத்தை தங்களுடைய அடுத்த போட்டியில் சிஎஸ்கே எதிர்கொள்கிறது. எனவே அப்போட்டியில் நன்றாக பேட்டிங் செய்து 200 – 230+ ரன்களை இலக்காக நிர்ணயத்தால் ஹைதராபாத்தை தோற்கடிக்க சென்னைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement