துணையா தல தோனி இருப்பாரு, பயம் வேண்டாம் – இளம் வீரருக்கு தீபக் சஹர் கொடுத்த அட்வைஸ் இதோ

Mukesh
Advertisement

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் உச்சகட்ட பரபரப்பை தொட்டுள்ள நிலையில் நடப்பு சாம்பியனாக விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 6 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் தவிக்கிறது. தற்போதைய நிலைமையில் அடுத்த 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றாலும் கூட அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு குறைவாகவே தென்படுகிறது. இருப்பினும் ஜடேஜா தலைமையில் தொடர் தோல்விகளால் தவித்து வந்த அந்த அணிக்கு மீண்டும் 4 கோப்பைகளை வென்று கொடுத்த ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி திரும்பியுள்ளது மிகப்பெரிய புத்துணர்ச்சியாக அமைந்துள்ளது.

CSK vs SRH

அந்த அணி இப்படி தடுமாறுவதற்கு சுமாரான பந்துவீச்சு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதிலும் 14 கோடி என்ற மிகப் பெரிய தொகையை செலவழித்து அந்த அணி நிர்வாகம் வாங்கிய தீபக் சஹர் ஆரம்பத்திலேயே காயத்தால் விலகியதே அதற்கு முழுமுதல் காரணமாக அமைந்தது. ஏனெனில் அவரை தவிர சென்னை அணியில் வேறு நல்ல அனுபவம் வாய்ந்த தரமான இந்திய வேகப்பந்துவீச்சாளர் இல்லை.

- Advertisement -

முகேஷ் சௌத்ரி:
அந்த சூழலில் வேறு வழியின்றி மகாராஷ்டிராவை சேர்ந்த 25 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரிக்கு வாய்ப்பளிக்க வேண்டிய இக்கட்டான நிலைமை சென்னைக்கு ஏற்பட்டது. அந்த நிலையில் ஆரம்பத்தில் சுமாராக பந்துவீசிய அவர் சமீபத்திய போட்டிகளில் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்க தொடங்கியுள்ளார். குறிப்பாக பரம எதிரியான மும்பைக்கு எதிரான போட்டியில் முதல் ஒவேரிலேயே ரோகித் சர்மா மற்றும் இஷான் கிசான் ஆகிய 2 தொடக்க வீரர்களையும் அடுத்தடுத்து டக் அவுட் செய்த அவர் 3 விக்கெட்டுகளை எடுத்து சென்னையின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Mukesh Chowthry CSK

அதேபோல் கடைசியாக ஐதராபாத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் 4 விக்கெட்டுகள் எடுத்த அவர் சென்னையின் வெற்றிக்கு துருப்பு சீட்டாக செயல்பட்டார். இப்படி இதுவரை 8 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 11 விக்கெட்டுகளை எடுத்து தீபக் சஹாரின் இடத்தை முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு பூர்த்தி செய்து வருவது பாராட்டுக்குரிய அம்சமாகும்.

- Advertisement -

தோனி இருப்பாரு:
இந்நிலையில் அணியில் இல்லாத போதிலும் அடிக்கடி தீபக் சாஹர் தன்னை தொடர்பு கொண்டு ஊக்கத்தைக் கொடுத்து வருவதாகவும் கேப்டன் தோனி இருப்பதால் கவலைப்படாமல் பந்துவீசு என்று கூறியதாகவும் முகேஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஹைதெராபாத்துக்கு எதிராக நான் 4 விக்கெட்டுகள் எடுத்த போது அவர் (சஹர்) என்னை அழைத்து “மிகச் சிறப்பாக செயல்பட்டாய். இதை இப்படியே தொடர்ந்து செய்” என்று பாராட்டினார்.

deepak 1

மேலும் “தோனி கூடவே இருப்பார் என்பதால் அவரின் வழிகாட்டுதலை பின்பற்றி பேட்ஸ்மேன் மீது எப்போதும் கண்ணை வைத்துகொண்டு செயல்படு” என்று அவர் கூறியது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. எந்த இடத்திலும் தவறு செய்கிறேன் என்பதை கண்டறிந்து அதில் எப்படி முன்னேற்றமடைய வேண்டுமென்ற ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். அதிலிருந்து தான் எனது பந்துவீச்சில் நல்ல முடிவுகள் கிடைத்தது”

- Advertisement -

“அவர் (சஹர்) சென்னை அணிக்காக நீண்ட நாட்களாக விளையாடி வரும் ஒரு அற்புதமான பவுலர். அவருடன் நான் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்து வருவதால் அவர் என்னை வழி நடத்துகிறார். இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் நான் மிகச்சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் அவர் என்னை அழைத்து ஒருசில டிப்ஸ்களை வழங்கினார். உண்மையாகவே அழுத்தத்தில் இருந்த எனக்கு அவர் கூறிய வார்த்தைகள் நிறைய உத்வேகத்தை கொடுத்துள்ளது” என்று கூறினார்.

Mukesh Chowdry

ஆரம்பகட்டத்தில் தடுமாறிய தமக்கு போன் வாயிலாக தீபக் சஹர் நிறைய ஆலோசனைகளை வழங்கியது தனது பந்துவீச்சில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கும் முகேஷ் சௌத்ரி களத்தில் கேப்டன் தோனியின் ஆதரவும் மிகப்பெரிய உதவியாக இருப்பதாக கூறியுள்ளார். புதிய பந்துகளை கையிலெடுத்து ஸ்விங் செய்து பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை எடுப்பதில் தீபக் சஹர் திறமையானவர் என்பதால் அவரை பவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் என ரசிகர்கள் அழைக்கின்றனர்.

- Advertisement -

அவரைப்போலவே இவரும் புதிய பந்தை பவர்ப்ளே ஓவர்களில் ஸ்விங் செய்து விக்கெட்டுக்களை எடுக்க தொடங்கியுள்ளார். அதிலும் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவர் அவரைவிட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பவுலராக காணப்படுகிறார். அதை மும்பைக்கு எதிராக முதல் ஓவரிலேயே இஷான் கிசான் மற்றும் ரோஹித் சர்மா போன்ற 2 தரமான பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து டக் அவுட் செய்ததில் பார்த்தோம்.

இதையும் படிங்க : அன்றும் இன்றும் தல ! பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் தோனி தொட்டுள்ள மைல்கல் சாதனை இதோ

மேலும் எந்த ஒரு பவுலருமே ஆரம்ப காலகட்டத்தில் தடுமாறத்தான் செய்வார்கள் என்ற நிலைமையில் ஆரம்பத்தில் தடுமாறிய முகேஷ் சௌத்ரி தற்போது ஜொலிக்கத் தொடங்கியுள்ளதால் நிச்சயம் வருங்காலத்தில் சென்னையின் ஒரு நம்பிக்கை நட்சத்திர பவுலராக உருவெடுக்க வாய்ப்புள்ளது.

Advertisement