அன்றும் இன்றும் தல ! பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் தோனி தொட்டுள்ள மைல்கல் சாதனை இதோ

Dhoni-3
Advertisement

கலை கட்டியிருக்கும் ஐபிஎல் 2022 தொடர் பல விறுவிறுப்பான திரில்லர் திருப்பங்களுடன் மும்பை நகரில் கோலாகலமாக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் மிகச் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்க அனைத்து அணிகளும் கடுமையாக போட்டியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடப்பு சாம்பியனாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 9 போட்டிகளில் 3 வெற்றிகள் 6 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலைமையில் அந்த அணி எஞ்சிய 5 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றாலும் பிளே-ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே காட்சி அளிக்கிறது.

Ruturaj Gaikwad - Devon Conway CSK vs SRH

இந்த வருடம் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரவீந்திர ஜடேஜா தலைமையில் களமிறங்கிய சென்னை ஆரம்பத்திலேயே 4 தொடர் தோல்விகளை சந்தித்து மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. அதன்பின் ஒருசில வெற்றிகளை பெற்றாலும் மீண்டும் தோல்வி சென்னை தோல்வி அடைந்தது என்பதை விட இதற்கு முன் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பொறுப்பேற்றதும் அதுவரை ஆல்-ரவுண்டராக அசத்திய ஜடேஜா பீல்டிங் உட்பட அனைத்திலும் சொசதப்ப தொடங்கினார்.

- Advertisement -

மீண்டும் தல தோனி:
அதனால் இந்த பொறுப்பே வேண்டாம் என்று மீண்டும் அதை தன்னிடம் வழங்கிய ஜாம்பவான் எம்எஸ் தோனியிடமே கேப்டன்ஷிப் பொறுப்பை பத்திரமாக ஜடேஜா ஒப்படைத்துவிட்டார். அந்த வகையில் தமிழக ரசிகர்களால் “தல” என கொண்டாடப்படும் எம்எஸ் தோனி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மீண்டும் கேப்டனாக திரும்பி மிகச்சிறப்பாக சென்னையை வழி நடத்தி வெற்றி பாதைக்கு திரும்ப வைத்தார்.

Ravindra Jaddeja MS Dhoni

அவர் கேப்டனாக திரும்பியது சென்னை அணி வீரர்களுக்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியை ஏற்படுத்தியதை ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் தெளிவாக பார்க்க முடிந்தது. கடந்த 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் இந்தியாவைப் போலவே ஒவ்வொரு வருடமும் தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக குறைந்தது பிளே-ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற தோனி தலைமையில் 12 சீசன்களில் பங்கேற்ற சென்னை 11 முறை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று 9 பைனல்களில் விளையாடி 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ளது. மகத்தான கேப்டன், மிரட்டலான பினிஷெர், மின்னல்வேக விக்கெட் கீப்பர் என பல பரிணாமங்களை கொண்ட அவர் பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து ரத்தமும் சதையும் கலந்த சென்னையின் இதயமாக பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

அன்றும் இன்றும் தல:
ஐபிஎல் தொடங்கப்பட்டபோது மும்பைக்கு சச்சின் கொல்கத்தாவுக்கு கங்குலி என நிறைய ஐபிஎல் அணிகளுக்கு அந்தந்த மாநில நட்சத்திரங்கள் கேப்டனாக பொறுப்பேற்றார்கள். ஆனால் தமிழகத்தில் அதுபோன்ற நட்சத்திர வீரர் இல்லாத காரணத்தால் 2007இல் டி20 உலகக் கோப்பையை இந்தியாவிற்கு வென்று கொடுத்த எம்எல் தோனியை சென்னை அணி நிர்வாகம் தங்களின் கேப்டனாக மிகப்பெரிய தொகைக்கு வாங்கி நியமித்தது. அன்று முதல் தனது அபார திறமையால் சச்சின், கங்குலி போன்றவர்களையும் மிஞ்சிய தோனி ஐபிஎல் வரலாற்றில் போட்டிகள் அடிப்படையில் ரோகித் சர்மாவை காட்டிலும் வெற்றிகரமான சூப்பர் ஸ்டார் கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

மேலும் தன்னை “தல” என்று தலையில் வைத்துக் கொண்டாடும் தமிழக ரசிகர்கள், மக்கள் மீது எப்போதும் தனி மரியாதையும் பிரியத்தையும் வைத்துள்ள அவர் தனது வாழ்நாளின் கடைசி கிரிக்கெட் போட்டி சென்னை மண்ணில்தான் நடைபெறும் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். அந்த அளவுக்கு ஜார்க்கண்டில் பிறந்தாலும் தமிழகத்தின் அடையாளமாய் மாறியுள்ள எம்எஸ் தோனி மே 4-ஆம் தேதி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னைக்காக 200-வது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார்.

- Advertisement -

தல 200:
அதன் வாயிலாக “ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்காக 200 போட்டிகளில் விளையாடிய 2-வது வீரர்” என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதுவரை 229 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 199 போட்டிகளில் சென்னைக்காக விளையாடியுள்ளார்.

rcbvscsk

எஞ்சிய 30 போட்டிகளை கடந்த 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் சென்னை தடை பெற்றபோது புனே அணிக்காக விளையாடியதாகும். முன்னதாக 2008 முதல் இப்போது வரை தொடர்ந்து பெங்களூர் அணிக்காக 217 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி ஏற்கனவே முதல் வீரராக அந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement