RCB அணியின் புதிய கேப்டன் இவர்தான். அதுக்காகத்தான் இவ்வளோ தொகை கொடுத்து – அவரை வாங்கியிருக்காங்க

RCB
- Advertisement -

இந்தியாவில் அடுத்த மார்ச் மாதம் இறுதியில் 15-வது ஐபிஎல் தொடரானது நடைபெற உள்ளது. கொரோனா அச்சம் காரணமாக குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே நடைபெற உள்ள இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது பெங்களூருவில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. ஏற்கனவே 10 அணிகளும் தங்கள் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருந்த வேளையில் மீதமுள்ள வீரர்கள் இந்த ஏலத்தின் மூலம் தேர்வு செய்து தற்போது தங்களது அணிகளை தயார் செய்து உள்ளன.

RCB

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே ஆர்சிபி அணி 3 வீரர்களை தக்க வைத்த நிலையில் மேலும் அணிக்கு வலு சேர்க்கும் வகையில் பல வீரர்களை தேர்வு செய்துள்ளது. ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் அந்த அணியின் புதிய கேப்டனாக யார் செயல்படுவார்? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முடியும் முன்னரே விராட் கோலி இந்த சீசன் வரைதான் தான் கேப்டனாக செயல்படுவேன் என்று தெரிவித்திருந்தார்.

இதனால் இந்த சீசனுக்கு ஆர்.சி.பி அணியில் புதிய ஒருவரே கேப்டனாக செயல்படுவார்கள். அதன்படி நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரோடு விராட் கோலி ஐபிஎல் தொடர் மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் தனது கேப்டன் பதவியை துறந்தார். இதன் காரணமாக இந்த ஆண்டு பெங்களூரு அணியின் புதிய கேப்டனோடு விளையாடும் என்பது உறுதியாகியுள்ளது.

Faf

ஏற்கனவே அணியில் மேக்ஸ்வெல் தக்க வைக்கப்பட்ட வேளையில் அவரே அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவரை எல்லாம் மிஞ்சி ஏலத்தின் போது ஒரு சிறப்பான வீரரை ஆர்.சி.பி தேர்வு செய்துள்ளது அவரே இந்த தொடரின் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சென்னையில் இருந்து வெளியேறிய டூபிளெஸ்ஸிஸ்-சை பெங்களூரு அணி பலத்த போட்டிக்கு இடையே 7 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கியுள்ளது.

- Advertisement -

இவரே விராட் கோலியுடன் துவக்க வீரராக இந்த தொடரில் களமிறங்குவார். அது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் மிகப் பெரிய அனுபவம் கொண்ட அவர் அதிக போட்டிகளில் கேப்டன்சி செய்துள்ளார். எனவே இந்த தொடரில் ஆர்.சி.பி அணியின் கேப்டனாக அவரே செயல்படுவார் என்று தெரிகிறது. அதோடு ஐபிஎல் தொடரிலும் அவர் கிட்டத்தட்ட 100 போட்டிகளில் விளையாடி உள்ளதால் நிச்சயம் இந்த அனுபவம் அவருக்கு உதவும் என்பதால் பெங்களூரு அணியின் கேப்டனாக அனுபவம் வாய்ந்த மூத்த வீரரான இவர் செயல்படுவார் என்று உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க : ஒரு உலகசாதனையை தொட போட்டி போடும் கிங் கோலி, ஹிட்மேன் ரோஹித் – முதலில் சாதிக்கப்போவது யார்?

மேலும் ரசிகர்களும் பெங்களூரு அணியின் கேப்டனாக டூபிளெஸ்ஸிஸ்-ஸை நியமித்தால் நிச்சயம் அவரது அனுபவம் பெங்களூர் அணிக்கு உதவும் என்று கூறி வருகின்றனர். இப்படி அவர் பெங்களூரு அணியின் கேப்டனாக ஆதரவும், வாய்ப்பும் பெருகி வருகிறது.

Advertisement