ஒரு உலகசாதனையை தொட போட்டி போடும் கிங் கோலி, ஹிட்மேன் ரோஹித் – முதலில் சாதிக்கப்போவது யார்?

Rohith-1
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா விளையாடி வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா வைட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றது. இதையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

INDvsWI

- Advertisement -

உலகப்புகழ் பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிப்ரவரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த தொடரின் முதல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. அகமதாபாத் நகரில் நடந்த ஒருநாள் தொடரை போலவே இதிலும் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் ஒருநாள் தொடரில் பெற்ற தோல்விக்கு இந்த டி20 தொடரை வென்று பதிலடி கொடுக்க கிரண் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் தீவிரமாக போராடும் என்பதால் இந்த தொடர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

டி20 விருந்து மழை:
இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 2 அணிகளிலுமே ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ், கிரண் பொல்லார்ட், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப் என இமாலய சிக்சர்களை பறக்கவிடும் வீரர்கள் நிறைந்து காணப்படுவதால் இந்த தொடர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய திரில் விருந்து மழை படைக்கும் என நம்பலாம். பொதுவாகவே டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை விட வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு வலுவான அணியாக கருதப்படுகிறது.

ஏனென்றால் அந்த அணியில் 11வது இடத்தில் களமிறங்கும் வீரர் கூட கடைசி நேரத்தில் சிக்ஸர்களை பறக்க விட்டு வெற்றியை எதிரணியிடம் இருந்து பறிக்கும் திறமை பெற்றவர்களாக காணப்படுகிறார்கள். அதன் காரணமாகவே டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 2 முறை உலக கோப்பைகளை வென்ற ஒரே அணியாக வெஸ்ட் இண்டீஸ் சாதனையும் படைத்துள்ளது. எனவே இந்த டி20 தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவிற்கு அதன் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகக் கடுமையான சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

உலக சாதனை:
இந்நிலையில் இந்த டி20 தொடரில் இந்தியாவின் நட்சத்திர அனுபவ வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரு புதிய உலக சாதனையை படைப்பதற்கு மிகப் பிரகாசமான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதாவது இந்த டி20 தொடரில் விராட் கோலி இன்னும் 73 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த பேட்டராக புதிய உலக சாதனை படைப்பார். அதேபோல இந்த டி20 தொடரில் 103 ரன்களை விளாசும் பட்சத்தில் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக உலக சாதனை படைக்க இந்தியாவின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் நல்ல வாய்ப்பு உள்ளது.

Rohith-1

தற்போது இந்தப் உலக சாதனை பட்டியலில் நியூசிலாந்தைச் சேர்ந்த மார்டின் கப்தில் 3299 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். சொல்லப்போனால் விராட் கோலி தான் இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். ஆனால் கடந்த நவம்பர் மாதம் இந்தியாவுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் அவரை முந்தி மார்டின் கப்டில் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியல் இதோ:
1. மார்ட்டின் கப்டில் : 3299 ரன்கள்
2. விராட் கோலி : 3227 ரன்கள்
3. ரோஹித் சர்மா : 3197 ரன்கள்
4. ஆரோன் பின்ச் : 2676 ரன்கள்
5. பால் ஸ்டிர்லிங் : 2660 ரன்கள்

- Advertisement -

எனவே இந்த டி20 தொடரில் இந்த உலக சாதனையை முதலாவதாக படைக்கப் போவது விராட் கோலியா அல்லது ரோகித் சர்மாவா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இவர்களில் விராட் கோலி சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 26 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான பார்மில் உள்ளார் என்பது விராட் கோலி ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது.

rohith

1000 ரன்கள்:
இத்துடன் நவீன கிரிக்கெட்டில் இந்தியா கண்டெடுத்த மகத்தான 2 பேட்டர்களாக விளங்கும் ரோகித் சர்மாவை “ஹிட்மேன்” எனவும் விராட் கோலியை “கிங்” எனவும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அப்படிப்பட்ட இவர்கள் டி20 போட்டிகளில் இந்தியாவிற்காக ஜோடி சேர்ந்து இதுவரை 942 ரன்களைக் குவித்து உள்ளார்கள்.

எனவே இந்த டி20 தொடரின் 3 போட்டிகளில் இந்த ஜோடி இன்னும் 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த 3வது இந்திய ஜோடி என்ற பெருமையை ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பெறுவார்கள். சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ள இந்திய ஜோடிகள் இதோ:
1. ரோஹித் சர்மா – ஷிகர் தவான் : 1743 ரன்கள்
2. ரோஹித் சர்மா – கேஎல் ராகுல் : 1535 ரன்கள்
3. ரோஹித் சர்மா – விராட் கோலி : 942* ரன்கள்

Advertisement