தோனி கூட சொல்லாத இந்த விஷயத்தை சி.எஸ்.கே ஓனர் ஸ்ரீனிவாசன் என்கிட்ட சொன்னாரு – தீபக் சாஹர் ஓபன்டாக்

Deepak
- Advertisement -

இந்தியாவில் நடைபெற உள்ள எதிர்வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது பெங்களூரு நகரில் கடந்த பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் 590 வீரர்கள் பதியப்பட்டு அதில் தேவைப்பட்ட வீரர்கள் 10 அணிகளுக்காகவும் வாங்கப்பட்டனர். இந்த ஏலத்தில் இந்திய வீரர் இஷான் கிஷன் அதிகபட்ச தொகையாக 15 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். அவருக்கு அடுத்து 14 கோடி கொடுத்து வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாகரை சென்னை அணி வாங்கி இருந்தது.

deepak 1

- Advertisement -

இதன்மூலம் இந்த ஐபிஎல் தொடரின் ஏலத்தில் அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்ட இரண்டாவது வீரராக தீபக் சஹர் திகழ்கிறார். இந்நிலையில் தான் 14 கோடி ஏலம் போனது குறித்தும் சிஎஸ்கே அணியில் இடம் பிடித்தது குறித்தும் தனது மன ஓட்டங்களை அவர் வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் மீண்டும் சிஎஸ்கே அணிக்காக மட்டுமே விளையாட விரும்பினேன். அந்த அளவிற்கு சிஎஸ்கே அணிக்கும் இடையேயான பிணைப்பு மிக அழகானது.

மஞ்சள் நிற ஜெர்சியை தவிர வேறு ஒரு ஜெர்ஸியில் விளையாடுவது குறித்து நான் யோசித்து கூட பார்த்தது கிடையாது. ஏலத்தின் போது எனக்கான விலை கொஞ்சம் அதிகம் என்றே தோன்றியது. சென்னை அணியை வலுவாக கட்டமைக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதனால் 13 கோடி ரூபாயை தாண்டி நான் செல்லக்கூடாது என்று நினைத்தேன். அதோடு எனக்கு செலவழிக்கும் அந்த தொகையை பயன்படுத்தி அணியில் மற்ற வீரர்களை எடுக்க வேண்டும் என்பதே என்னுடைய நினைப்பாக இருந்தது.

deepak

இருந்தாலும் சிஎஸ்கே என்னை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கியுள்ளனர். எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரிலும் எனது சிறப்பான செயல்பாட்டை நான் சிஎஸ்கே அணிக்காக வெளிப்படுத்துவேன் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் சிஎஸ்கே அணியின் உரிமையாளரான ஸ்ரீனிவாசன் 2018 ஆம் ஆண்டு தனக்கு அளித்த ஒரு வாக்குறுதி குறித்தும் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் சிஎஸ்கே அணிக்காக தேர்வு செய்யப்பட்டு முதல் சீசனில் விளையாடும் போது என்னுடைய செயல்பாட்டை உற்று நோக்கிய சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என்னிடம் :

- Advertisement -

இனிவரும் சீசன்களிலும் நீ எப்பொழுதுமே மஞ்சள் நிறத்தில் விளையாடுவாய் நாங்கள் இருக்கிறோம் என்று எனக்கு வாக்குறுதி அளித்திருந்தார். அந்தவகையில் இந்த ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணி என்னை விடாமல் தேர்வு செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சி.எஸ்.கே அணியின் உரிமையாளர் சீனிவாசனுக்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தீபக் சாகர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அவர் களத்தில் இருக்கும் வரை மேட்ச் முடியாது – சி.எஸ்.கே வீரரை புகழ்ந்த மார்க்கஸ் ஸ்டோய்னிஸ்

கடந்த 2016-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகிய தீபக் சாகர் இதுவரை 63 போட்டிகளில் விளையாடி 59 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அதிலும் குறிப்பாக கடைசி சில ஆண்டுகளாகவே சென்னை அணிக்காக விளையாடி வரும் அவர் பவர்பிளே ஓவர்களில் தனது அட்டகாசமான பவுலிங்கை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு பெருமளவில் உதவி வருவதாலும், தற்போது பேட்டிங்கில் அவர் கூடுதல் கவனத்தை செலுத்தி உள்ளதாலும் இம்முறை அதிக தொகைக்கு சிஎஸ்கே அணியில் தேர்வானது குறிப்பிடத்தக்கது.

Advertisement