அவர் களத்தில் இருக்கும் வரை மேட்ச் முடியாது – சி.எஸ்.கே வீரரை புகழ்ந்த மார்க்கஸ் ஸ்டோய்னிஸ்

stoinis
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதில் 204 வீரர்கள் 551 கோடி ரூபாய் செலவில் 10 அணிகளுக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்கள். இந்த வருடம் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் என்ற 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டதால் கடந்த 2018க்கு பின் முதல் முறையாக அனைத்து அணிகளும் முழுமையாக கலைக்கப்பட்டு இந்த வருடம் மெகா ஏலம் நடை பெற்றது.

lucknow 1

- Advertisement -

இந்த ஏலத்துக்கு முன்பாக புதிதாக பெயரிடப்பட்டுள்ள லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி நிர்வாகம் தங்கள் அணிக்கு இந்தியாவின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுலை 17 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கி கேப்டனாக நியமனம் செய்தது. அதேபோல் முன்னாள் ஜாம்பவான்கள் கௌதம் கம்பீர், ஆன்டி பிளவர் போன்றவர்களையும் தங்கள் அணியின் பயிற்சியாளர் குழுவில் நியமனம் செய்தது.

மார்கஸ் ஸ்டோனிஸ்:
அதேபோல ஏலத்துக்கு முன்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் இளம் இந்திய வீரர் ரவி பிஷ்னோய் ஆகியோரையும் லக்னோ அணி நிர்வாகம் வாங்கியது. இதையடுத்து நடைபெற்ற ஏலத்தில் ஆல்-ரவுண்டர்கள் பிரிவில் க்ருனால் பாண்டியா, தீபக் ஹூடா ஆகிய இந்திய வீரர்களை அந்த அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

stonis 1

இதை தொடர்ந்து கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி ஐபிஎல் 2022 தொடரை முதல் முறையாக சந்திக்க உள்ளது. அந்த அணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் மிகச் சிறப்பாக செயல்படுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகிறது. கடந்த சீசன்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்த அவர் கடைசி நேரத்தில் களமிறங்கி போட்டியை வெற்றிகரமாக பினிஷிங் செய்யும் திறமையை பெற்றுள்ளார்.

- Advertisement -

தோனி மாதிரி வரணும்:
இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி போல ஒரு நல்ல பினிசெராக வர வேண்டும் என மார்கஸ் ஸ்டோனிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுபற்றி இந்திய கிரிக்கெட் வல்லுனர் போரியா மஜூம்தார் உடன் நிகழ்ந்த உரையாடலில் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில்  டெல்லி அணிக்கு எதிராக நடந்த அரையிறுதி போட்டியில் தனி ஒருவனாக சென்னைக்கு வெற்றியை தேடி தந்த பின்னர் தோனியிடம் நான் நிறைய பேசினேன். அவர் அந்த போட்டியை பற்றி நிறைய பேசினார். அவர் போட்டியை எவ்வாறு பார்க்கிறார், எவ்வாறு சூழ்நிலையை சமாளிக்கிறார், எவ்வாறு உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது போன்ற பல அம்சங்களை பகிர்ந்து கொண்டார்” என தெரிவித்தார்.

Stonis

கடந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிராக நடந்த பிளே ஆப் போட்டியில் கடைசி நேரத்தில் சென்னை தடுமாறிய போது களமிறங்கிய தோனி வெறும் 6 பந்துகளில் 18* ரன்கள் விளாசி தனது அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றார். அந்தப் போட்டி முடிந்த பின்னர் தம்மிடம் தோனி பேசியது பற்றி மார்கஸ் ஸ்டோனிஸ் பேசியது பின்வருமாறு. ” போட்டியை இறுதி வரை எடுத்துச் சென்று பொறுப்புடன் விளையாட வேண்டும் என அவர் என்னிடம் கூறினார்.
அதைச் செய்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.

- Advertisement -

ஒன்று ரன்களை முன்னதாகவே அடித்து 18வது ஓவரிலேயே ஆட்டத்தை முடிக்க முயற்சிப்பது. ஆனால் தோனியின் வழியில் ஆபத்து என்னவென்றால் திடீரென நாம் அவுட் ஆகிவிட்டால் அந்த பொறுப்பை வேறொருவரிடம் விட்டுவிடுவீர்கள். ஆனால் அதன் காரணமாக உங்கள் அணி மற்றும் உங்களைச் சுற்றி பேட்டிங் செய்யும் நபர்களுடன் அதே மாதிரியான முயற்சியை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்று தோனி என்னிடம் தெரிவித்தார்” என ஸ்டோனிஸ் கூறியுள்ளார்.

Marcus Stoinis MS Dhoni

போட்டி முடியாது:
பொதுவாகவே களத்தில் தோனி நின்றால் அந்த அணி வெற்றி பெற்று விடும் என்ற தன்னம்பிக்கை அவர் விளையாடும் அணிக்கும் ரசிகர்களுக்கும் எப்போதும் இருக்கும். அதுபற்றி ஸ்டோனிஸ் பேசியது பின்வருமாறு. “தோனி களத்தில் இருக்கும் வரை அந்தப் போட்டி முடியாது என அவருக்கு மட்டுமல்ல மைதானத்தில் இருக்கும் ரசிகர்களுக்கும் எதிர் அணிகளுக்கும் தெரியும். அப்படி இல்லை என்றாலும் கூட அந்த போட்டியை கட்டுப்படுத்த என்னால் யோசிக்க முடியாததை அவர் யோசிப்பார் என தெரியும்.

- Advertisement -

கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்படும் போது அவரால் அதை அடிக்க முடியும் என்ற எண்ணம் அனைவருக்குமே வரும். என்னைக் கேட்டால் அதுதான் அவர் உருவாக்கிய கலையாகும். அதைப் பார்த்து நிறைய பேர் உத்வேகம் அடைந்துள்ளார்கள். பின்னர் அமைதியாக இருப்பது எப்படி என்று என்னிடம் அவர் பேசினார்.அவர் அமைதியாக அல்லது சிறந்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் மற்றவர்கள் தடுமாறும் போது அதை அவர் சரியாக பயன்படுத்தி தனது அணிக்கு வெற்றியை தேடி தருபவராக உள்ளார்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலியின் 100 ஆவது டெஸ்ட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் – பழி வாங்குகிறதா பி.சி.சி.ஐ

இந்தியா கண்ட மகத்தான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக விளங்கும் எம்எஸ் தோனி பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ரோல் மாடலாக இருந்து வருகிறார். அந்த வகையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மார்கஸ் எம்எஸ் தோனியை போல விளையாட வேண்டும் என நினைப்பது இந்திய ரசிகர்களுக்கு பெருமையை கொடுக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.

Advertisement