விராட் கோலியின் 100 ஆவது டெஸ்ட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் – பழி வாங்குகிறதா பி.சி.சி.ஐ

Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அபாரமாக செயல்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் வெற்றி பெற்றது.

INDvsSl-1

- Advertisement -

இதை தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 16 முதல் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்க உள்ளது. வரும் பிப்ரவரி 20ஆம் தேதியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய சுற்றுப்பயணம் நிறைவுக்கு வருகிறது.

இலங்கை சுற்றுப்பயணம்:
இதை தொடர்ந்து இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அண்டை நாடான இலங்கை இந்தியாவுக்கு எதிராக 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. முன்னதாக இந்த தொடரில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் டெஸ்ட் தொடர் முதலிலும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2வதாகவும் நடைபெற இருந்தது. ஆனால் முதலில் டி20 தொடரையும் அதன்பின் டெஸ்ட் தொடரையும் நடத்துமாறு பிசிசிஐக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் கோரிக்கை வைத்தது.

indvssl

தற்போது அதை ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பிசிசிஐ முதலில் டி20 தொடரை நடத்திவிட்டு அதன் பின் டெஸ்ட் தொடரை நடத்த சம்மதம் தெரிவித்து அதற்கான புதிய அட்டவணையும் வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த சுற்றுப்பயணத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்த நினைத்த பிசிசிஐ விருப்பத்தை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதையடுத்து வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் முதல் முறையாக ஒரு பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளன.

- Advertisement -

இலங்கை அணியின் இந்திய சுற்றுப் பயணத்துக்கான அதிகாரப்பூர்வ புதிய அட்டவணை இதோ:
முதல் டி20, பிப்ரவரி 24, லக்னோ.
2வது டி20, பிப்ரவரி 26, தர்மசாலா.
3வது டி20, பிப்ரவரி 27, தர்மசாலா.
முதல் டெஸ்ட், மார்ச் 4 – 8, மொஹாலி.
2வது டெஸ்ட் (பகல்/இரவு), மார்ச் 12 – 16, பெங்களூரு.

Cricket – England v India – Second Test – Lord’s, London, Britain – August 11, 2018 India’s Virat Kohli during the match Action Images via Reuters/Paul Childs

100வது டெஸ்ட்:
ஆனாலும் பிசிசிஐயின் இந்த புதிய அறிவிப்பு விராட் கோலி ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஏனென்றால் இந்த சுற்றுப் பயணத்துக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பழைய அட்டவணையில் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவிலும் 2வது டெஸ்ட் போட்டி மொஹாலியிலும் நடைபெற இருந்தது. அதன் காரணமாக இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 100வது டெஸ்ட் போட்டியை பெங்களூருவில் விளையாட இருந்தார்.

- Advertisement -

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒரு சீசனை கூட தவற விடாமல் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி பெங்களூரு ரசிகர்கள் மற்றும் மக்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். அதன் காரணமாக தனது 2வது வீடாக கருதப்படும் பெங்களூருவில் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பதை எண்ணி அவரும் அவரின் ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய அட்டவணையின்படி அவர் தனது 100வது டெஸ்ட் போட்டியை மொகாலியில் விளையாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

Ganguly

பழி வாங்குகிறதா:
இதனால் கடும் ஏமாற்றமடைந்த விராட் கோலியின் ரசிகர்கள் இது பிசிசிஐயின் பழிவாங்கும் படலம் என சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள். ஏனெனில் கடந்த டிசம்பர் மாதம் விராட் கோலியை ஒருநாள் கேப்டன் பதவியில் பதவியிலிருந்து பிசிசிஐ அதிரடியாக நீக்கியது. அப்போது “டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை விலக வேண்டாம் என கேட்டுக் கொண்டதாக சௌரவ் கங்குலி” தெரிவித்திருந்தார்.

இருப்பினும் “அவ்வாறு சௌரவ் கங்குலி தம்மிடம் கேட்கவில்லை” என விராட் கோலி உண்மையை போட்டுடைத்தார். இறுதியில் அது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “இது பற்றி கூறுவதற்கு கருத்து எதுவும் இல்லை, நேரம் வரும்போது பிசிசிஐ இதை பார்த்துக் கொள்ளும்” என சவுரவ் கங்குலி பதிலளித்திருந்தார். பிசிசிஐ – விராட் கோலி ஆகியோருக்கிடையே பிளவு ஏற்பட்டது அந்த தருணம் உலகிற்கு வெட்ட வெளிச்சமாகியது. அந்த வேளையில் தற்போது விராட் கோலியை அவரின் 100வது டெஸ்ட் போட்டியை பெங்களூருவில் விளையாட விடாமல் செய்துள்ளதை பார்த்தால் அவரை பிசிசிஐ பழிவாங்குகிறதா என யோசிக்க வைக்கிறது.

Advertisement