சுரேஷ் ரெய்னாவை நாங்க வாங்காம விட்டதுக்கு இது மட்டும் தான் காரணம் – காரணத்தை சொன்ன நிர்வாகம்

Raina
- Advertisement -

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கிடையே ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 2018க்கு பின் முதல் முறையாக மெகா அளவில் 2 நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் பங்கேற்ற 590 வீரர்களில் இருந்து 204 வீரர்கள் மட்டும் 551 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டார்கள்.

CSK-Auction

- Advertisement -

இந்த ஏலத்தில் அதிக விலை போன வீரராக இந்தியாவைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிசான் ரூபாய் 15.25 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகி சாதனை படைத்தார். அதேபோல் இந்த மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தமான வெளிநாட்டு வீரராக இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் ரூபாய் 11.50 கோடிகளுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி அசத்தினார்.

சோடை போன நட்சத்திரங்கள்:
மேலும் தீபக் சஹர், ஸ்ரேயாஸ் அய்யர், டேவிட் வார்னர், ஷார்துல் தாகூர், ஹர்ஷல் படேல் போன்ற வீரர்கள் எதிர்பார்த்தது போலவே அற்புதமான தொகைக்கு ஒப்பந்தமாகி அசத்தினார்கள். அதேசமயம் ஆவேஷ் கான், டிம் டேவிட் போன்ற ஒரு சில வீரர்கள் யாரும் எதிர்பாராத வண்ணம் மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தார்கள்.

raina

இருப்பினும் இந்த ஏலத்தில் ஸ்டீவ் ஸ்மித், ஆரோன் பின்ச் போன்ற நட்சத்திர வீரர்களை எந்த அணியும் வாங்காதது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அதை விட இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா கடைசிவரை எந்த ஒரு அணியும் ஏலத்தில் வாங்காமல் போனது ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில் ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்டது முதல் கடந்த சீசன் வரை விளையாடி வந்த அவர் “மிஸ்டர் ஐபிஎல்” என்று அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தார். ஆனால் அப்படி ஒரு மகத்தான பெயர் பெற்றவருக்கு ஐபிஎல் தொடரில் இடமில்லை என்றால் அது நிச்சயம் பல ரசிகர்களின் மனதை உடைத்துள்ளது என்றே கூறலாம்.

- Advertisement -

நன்றி இல்லாத சென்னை:
கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்டது முதல் சென்னை அணிக்காக விளையாடி வந்த அவர் ஆரம்பம் முதலே மிகச் சிறப்பாக விளையாடி சென்னையின் பல சரித்திர வெற்றிகளில் பங்காற்றினார். இதனால் சென்னை ரசிகர்களால் “சின்ன தல” என்று கொண்டாடப்பட்ட அவர் சென்னை சாம்பியன் பட்டம் வென்ற 4 சீசன்களிலும் முக்கிய பங்காற்றினார். எம்எஸ் தோனி போல சென்னையின் ஒரு முகமாக காட்சியளித்த அவர் கடந்த சில வருடங்களாக ரன்கள் குவிக்க தடுமாறியதால் இம்முறை நடந்த ஏலத்தில் அடிப்படை விலைக்கு கூட சென்னை அணி நிர்வாகம் நன்றி இல்லாமல் வாங்காதது சென்னை ரசிகர்களை கடும் கோபமடைய செய்துள்ளது.

raina 1

இந்நிலையில் சுரேஷ் ரெய்னாவை ஏன் மெகா ஏலத்தில் வாங்கவில்லை என்ற காரணத்தை சென்னை அணியின் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்றைய ஏலம் முடிந்த பின்னர் அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த 12 வருடங்களாக சென்னை அணியில் தொடர்ச்சியாக சுரேஷ் ரெய்னா மிகச் சிறப்பாக விளையாடி வந்தார். அதனால் அவர் இம்முறை எங்கள் அணியில் இல்லாதது மிகப்பெரிய வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் எப்போதுமே ஒரு அணியில் வீரர்களை அவர்களின் தற்போதைய பார்ம் மற்றும் எதிர் காலத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதன் காரணமாகவே அவர் தற்போது அணியில் பிட்டாக மாட்டார் என நினைக்கிறோம்” என கூறியுள்ளார்.

- Advertisement -

விருப்பம் இல்லையா:
இதை வைத்து பார்க்கும் போது சுரேஷ் ரெய்னாவை வாங்குவதற்கு சென்னை அணி நிர்வாகத்திடம் ஆர்வமும் விருப்பமும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இருப்பினும் இந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் 25 வீரர்களை வாங்கியதுபோக இன்னும் கூட 2.95 கோடிகள் சென்னையிடம் மீதமுள்ளது. அந்த வேளையில் அந்த அணிக்காக சுரேஷ் ரெய்னா ஆற்றிய பங்கிற்காகவது அவரை குறைந்தபட்சம் 2 கோடிகளுக்கு வாங்கி பெஞ்சிலாவது அமர வைத்திருக்கலாமே என சென்னை ரசிகர்கள் நியாயமான கேள்வியை முன்வைக்கிறார்கள்.

இதையும் படிங்க : அவங்க 2 பேரும் ஒரே டீம்ல இருக்குறதால மும்பை அணி எல்லாரையும் மிரட்ட போகுது – இர்பான் பதான் ஓபன்டாக்

அது மட்டுமல்லால் பப் டு பிளேஸிஸ் போன்ற முக்கிய வீரர்களையும் சென்னை நிர்வாகம் வாங்கவில்லை. அதுபற்றி காசி விஸ்வநாதன் கூறியது பின்வருமாறு. “டு பிளேஸிசை மிகவும் மிஸ் செய்கிறோம். அவர் கடந்த ஒரு தசாப்தமாக சென்னை அணியில் முக்கிய பங்காற்றினார். இருப்பினும் இவ்வாறு நடைபெறுவது தானே ஏலம்” என குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் வரலாற்றில் முதல் முறையாக சுரேஷ் ரெய்னா ஏலத்தில் வாங்கப்படாததால் ஐபிஎல் 2022 தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்பது ரசிகர்களை வேதனை அடைய செய்துள்ளது.

Advertisement