அவங்க 2 பேரும் ஒரே டீம்ல இருக்குறதால மும்பை அணி எல்லாரையும் மிரட்ட போகுது – இர்பான் பதான் ஓபன்டாக்

pathan 1
- Advertisement -

உலகப்புகழ் புகழ்பெற்ற ஐபிஎல் டி20 தொடரின் 15வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் மெகா அளவில் 2 நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஏலத்தில் உலகம் முழுவதிலும் இருந்து 590 வீரர்கள் பங்கு பெற்ற போதிலும் அதிலிருந்து 204 வீரர்கள் மட்டுமே 551 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டார்கள்.

mi

- Advertisement -

வழக்கம் போலவே இந்த ஏலம் துவங்கியதுமே நட்சத்திர வீரர்களை வாங்குவதற்கு அனைத்து அணிகளிடமும் கடும் போட்டி நிலவியது. குறிப்பாக வெளிநாட்டு வீரர்களை வாங்குவதற்கு ஒரு சில அணிகள் கடுமையாக போட்டி போட்டு பல கோடி ரூபாய்களை வாரி இறைத்தன.

மும்பை இந்தியன்ஸ்:
இந்த ஏலத்தில் இந்தியாவின் பணக்காரராக விளங்கும் முகேஷ் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுக்கு தேவையான 25 வீரர்களை தேர்வு செய்தது. அதில் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், கிரண் பொல்லார்ட் ஆகிய 4 வீரர்களை ஏற்கனவே தக்க வைத்துக் கொண்டதால் எஞ்சிய 21 வீரர்களை இந்த ஏலத்தின் வாயிலாக அந்த அணி நிர்வாகம் எடுத்தது.

Ganguly-ipl
IPL MI

அதில் அதிகபட்சமாக இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிசான் 15.25 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கிய மும்பை அணி நிர்வாகம் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் டிம் டேவிட்டை 8.25 கோடிகளுக்கு ஒப்பந்தம் செய்து அசத்தியது. அதுமட்டுமல்லாமல் டேனியல் சம்ஸ், டைமல் மில்ஸ் போன்ற வெளிநாட்டு வீரர்களையும் தேவால்ட் ப்ரேவிஸ், திலக் வர்மா போன்ற இளம் வீரர்களையும் வாங்கியுள்ள அந்த அணி நிர்வாகம் தங்கள் அணியின் எதிர்காலத்தை இப்போதே வலுப்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஜோப்ரா ஆர்ச்சர்:
எப்போதுமே எதிர் காலத்தை கணக்கில் வைத்து அடி எடுத்து வைக்கும் அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் இந்த வருடம் ஒரு படி மேலே சென்று இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோப்ரா ஆர்ச்சரை 8 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஏனெனில் காயம் காரணமாக ஐபிஎல் 2022 தொடரில் 100% அவர் பங்கேற்க மாட்டார் எனத் தெரிந்திருந்தும் 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் விளையாடுவதற்காக இப்போதே அந்த அணி நிர்வாகம் அவரை வளைத்துப் போட்டுள்ளது.

Archer 1

இந்நிலையில் ஜோப்ரா ஆர்ச்சரை வாங்கியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியை இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் மனதார பாராட்டியுள்ளார். இதுபற்றி நேற்று ஐபிஎல் ஏலம் முடிந்த பின்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜோப்ரா ஆர்ச்சர் பெயர் வரும் வரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் காத்திருந்து எடுத்தது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் முடிவாகும். இந்த முடிவு 2 வகையில் பலனளிக்க உள்ளது. ஒருவேளை இந்த வருடம் அவர் விளையாடாமல் போனால் கூட அடுத்த சீசனில் பும்ராவுடன் இணைந்து பந்து வீசுவார்.

- Advertisement -

இந்த ஜோடி லசித் மலிங்கா – ஜஸ்பிரித் பும்ரா போல எதிரணியை மிரட்டக் கூடியதாகும்” என கூறியுள்ள அவர் இந்த வருடம் ஆர்ச்சர் விளையாடாமல் போனால் கூட அடுத்த வருடம் பும்ராராவுடன் இணைந்து எதிரணி வீரர்களை திணறடிக்க உள்ளதை நினைத்தால் இப்போதே மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Jasprith Bumrah Jofra Archer

பும்ரா – ஆர்ச்சர் மிரட்டல் ஜோடி:
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் யார்கர் கிங் லசித் மலிங்காவுடன் இணைந்து இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அபாரமாக பந்துவீசினார். இந்த கூட்டணியின் அற்புதமான பந்துவீச்சால் 2015, 2017, 2019 என அடுத்தடுத்த கோப்பைகளை வென்று மும்பை இந்தியன்ஸ் அணி சாதனை படைத்தது. தற்போது விரைவில் அதேபோல பும்ரா – ஆர்ச்சர் ஜோடி பந்து வீசுவார்கள் என மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு. “இந்த வருடம் ஆர்ச்சர் விளையாடாமல் போனால் கூட அடுத்த வருடம் முதல் பும்ரா – ஆர்ச்சர் ஜோடி சேர்ந்து பந்து வீச உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இருவரும் எங்கள் அணியின் பந்துவீச்சில் மிரட்டலை விடுக்க கூடியவர்களாக இருப்பார்கள்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க : வெறும் பெஞ்சில் உட்கார அவருக்கு 8 கோடியா. மும்பையை விளாசும் சஞ்சய் மஞ்சரேக்கர் – என்ன நடந்தது?

இதே கருத்தைப் பற்றி இந்தியாவின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்தது பின்வருமாறு. “அவர் கடந்த 6 மாதங்களாக விளையாடி பார்க்கவில்லை. அதேபோல் அவர் எப்போது திரும்புவார் என்றும் தெரியாது. இருப்பினும் அடுத்த 3 – 4 வருடங்களை கருத்தில் கொண்டால் அவரை தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான முடிவாகும். அவர் பும்ராராவுடன் இணைந்து அபாரமாக பந்து வீசக்கூடியவர்” என கூறியுள்ளார்.

Advertisement