வெறும் பெஞ்சில் உட்கார அவருக்கு 8 கோடியா. மும்பையை விளாசும் சஞ்சய் மஞ்சரேக்கர் – என்ன நடந்தது?

Sanjay
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் மிகவும் பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. பெங்களூருவில் 2 நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் உலகம் முழுவதிலுமிருந்து 590 வீரர்கள் பங்கு பெற்றார்கள். இருப்பினும் அதிலிருந்து தங்களுக்கு தேவையான 204 வீரர்களை மட்டுமே 551 கோடிகளை செலவு செய்து அனைத்து அணிகளும் வாங்கியுள்ளன.

mi

- Advertisement -

இந்த மெகா ஏலத்தில் டேவிட் வார்னர், ஷ்ரேயஸ் ஐயர் போன்ற நட்சத்திர வீரர்கள் எதிர்பார்க்கப்பட்டது போலவே மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். அதேசமயம் இந்த ஏலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், நடராஜன், சாருக்கான் போன்ற நட்சத்திர வீரர்களும் பெரிய விலைக்கு ஒப்பந்தமானது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மும்பை இந்தியன்ஸ்:
இந்த மெகா ஏலத்தில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஆரம்பம் முதலே நட்சத்திர வீரர்களை ஆர்வத்துடன் வாங்க துவங்கியது. குறிப்பாக இந்தியாவின் இளம் வீரர் இஷான் கிஷனை யாரும் எதிர்பாராத வண்ணம் 15.25 என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

MI-Auction

அதேபோல் சிங்கப்பூரை சேர்ந்த ஆல் ரவுண்டர் வீரர் டிம் டேவிட்டை 8.25 கோடி என்ற மிகப் பெரிய விலைக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதைவிட இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை 8 கோடிக்கு கடும் போட்டி போட்டு மும்பை வாங்கியது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது என்று கூறலாம்.

- Advertisement -

ஜோப்ரா ஆர்ச்சர்:
ஏனென்றால் கடந்த வருடம் காயமடைந்த அவர் 2021 ஐபிஎல் மற்றும் ஐசிசி டி20 உலககோப்பை ஆகிய தொடர்களில் பங்கெடுக்கவில்லை. இன்னும் கூட அதில் இருந்து முழுமையாக குணமடையாத போதிலும் அதற்குள் குணம் அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையில் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பங்கேற்க ஜோப்ரா ஆர்ச்சர் விண்ணப்பம் செய்திருந்தார்.

Archer 1

அந்த வேளையில் அவரின் காயம் காரணமாக ஐபிஎல் 2022 தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகம் என ஏற்கனவே அனைத்து அணிகளிடமும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதாவது இம்முறை ஏலத்தில் அவரை எடுத்தாலும் காயம் காரணமாக ஒருவேளை ஐபிஎல் தொடரில் அவரால் பங்கேற்க முடியாமல் போனால் அவருக்கு மாற்று வீரர் அனுமதிக்கப்பட மாட்டாது என பிசிசிஐ தெளிவாக கூறியிருந்தது. அப்படிப்பட்ட வேளையில் அவரை 8 கோடிகளுக்கு போட்டி போட்டு மும்பை வாங்கியுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

- Advertisement -

பெஞ்சில் அமர 8 கோடியா:
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் உறுதியாக பங்கேற்க மாட்டார் எனத் தெரிந்திருந்தும் ஆர்ச்சரை 8 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் எடுத்ததற்காக இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுபற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜோப்ரா ஆர்ச்சர் ஒரு மிகச் சிறந்த பரிசாக கிடைத்த பவுலர் ஆவார். இதற்கு முந்தைய ஐபிஎல் தொடரிலும் அவர் அசத்தியுள்ளார்.

Archer

மேலும் அவர் சூப்பர் ஓவரில் பந்துவீசும் திறமையை பெற்ற அபாரமான பந்து வீச்சாளர். ஆனால் அவரின் தற்போதைய நிலைமை பற்றி தெரிந்திருந்தும் மும்பை எதற்காக அவரை இவ்வளவு போட்டி போட்டு எடுக்க வேண்டும். ஏனெனில் 23 கோடிகளை இஷான் கிசான் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகிய இருவருக்காக மட்டும் அந்த அணி செலவு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் ஆர்ச்சர் பங்கேற்பது சந்தேகம் என தெளிவாக தெரிகிறது” என கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் மேலும் கூறியது பின்வருமாறு. “அவர் இந்த சீசனில் விளையாட மாட்டார் என தெரியும். ஆனாலும் அவரை இப்போது வாங்கினால் 2023 மற்றும் 2024 ஆகிய சீசன்களில் மிகக் குறைந்த விலைக்கு வாங்க முடியும். அதற்காக இவ்வளவு தொகைகள் செலவு செய்ததால் மற்ற வீரர்களை வாங்குவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரு நட்சத்திர வீரர்கள் அடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியை நம்மால் பார்க்க முடியவில்லை. பொதுவாகவே மும்பை அணியில் நட்சத்திர வீரர்கள் ததும்புவார்கள்.

Archer

ஆனால் இம்முறை இஷான் கிசான் மற்றும் ஆர்ச்சர் ஆகியோரை வாங்குவதற்காக மும்பை பல வீரர்களை தியாகம் செய்துள்ளது” என தெரிவித்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஐபிஎல் 2022 தொடரில் எப்படியும் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாட மாட்டார் என தெரிந்தும் பெஞ்சில் அமர்வதற்காக 8 கோடிகளை செலவு செய்து அவரை வாங்குவதற்கான அவசியம் என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

அத்துடன் அவ்வளவு பெரிய தொகையை இவருக்கு செலவு செய்த காரணத்தால் வேறு சில முக்கிய நட்சத்திர வீரர்களை வாங்க முடியாமல் போய்விட்டதாகவும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே இந்தியாவின் நட்சத்திர அதிரடி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பிடித்துள்ளார். எனவே அடுத்த சீசன் முதல் பும்ரா – ஆர்ச்சர் ஜோடி ஒன்றாக சேர்ந்து எதிரணிகளை திணறடிக்கும் வண்ணமாகவே மும்பை இந்தியன்ஸ் அவரை இவ்வளவு செலவு செய்து வாங்கியுள்ளது என கருதப்படுகிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் முதல் முறையாக நிகழ்ந்த 5 சுவாரசியமான நிகழ்வுகள் – என்னனு பாருங்க

பொதுவாகவே பவர்பிளே மற்றும் இறுதிக்கட்டம் என போட்டியின் எந்த இடத்திலும் மிகத் துல்லியமாக பந்துவீசும் திறமையை கொண்ட இவர்கள் ஒரே அணியில் ஒன்றாக விளையாடுவது வரவேற்கத்தக்க ஒன்று என இதுபற்றி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இறுதியாக கூறியுள்ளார்.

Advertisement