ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் முதல் முறையாக நிகழ்ந்த 5 சுவாரசியமான நிகழ்வுகள் – என்னனு பாருங்க

- Advertisement -

உலகம் முழுவதிலும் இருந்த கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்களிடையே இருந்த மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா வீரர்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரு மாநகரில் கோலாகலமாக நடைபெற்ற இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 வீரர்கள் பங்கேற்றார்கள்.

hugh

- Advertisement -

மொத்தம் 2 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த இந்த ஏலம் சுமார் 19 மணி நேரம் கடும் போட்டியுடன் மிகுந்த விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் தரமான வீரர்களை வாங்க எதைப்பற்றியும் யோசிக்காத 10 அணிகளும் பல கோடி ரூபாய்களை செலவழித்து தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கின.

மொத்த விவரம்:
2 நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் பங்கேற்ற 590 வீரர்களில் இருந்து 204 வீரர்கள் மட்டும் அந்தந்த அணிகளுக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் முதல் நாளன்று 74 வீரர்களும் 2வது நாளன்று 130 வீரர்களும் ஏலத்தில் வாங்கப்பட்டார்கள். இந்த மொத்த வீரர்களை வாங்க இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 551 கோடி ரூபாய்களை 10 அணிகளும் செலவு செய்துள்ளன.

ex

இதில் அதிகபட்சமாக இளம் இந்திய வீரர் இஷான் கிஷான் 15.25 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் வாயிலாக ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக இஷான் கிசான் சாதனை படைத்துள்ளார். சரி இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் முதல் முறையாக நிகழ்ந்த ஒரு சில முக்கியமான நிகழ்வுகளை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. 11 கோடீஸ்வர்கள்: இந்த ஐபிஎல் ஏலத்தில் நிறைய வீரர்கள் பல கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார்கள். அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக 11 வீரர்கள் தலா 10 கோடி அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட ரூபாய்களுக்கு விலை போனார்கள். இப்படி ஐபிஎல் நேரடி ஏலத்தில் 11 வீரர்கள் 10 கோடிக்கு மேல் விலை போனது இதுவே வரலாற்றில் முதல் முறையாகும். அந்தப் 11 வீரர்களின் விபரம் இதோ:
இஷான் கிசான் : 15.25 கோடி (மும்பை)
தீபக் சஹர் : 14 கோடி (சென்னை)
ஷ்ரேயஸ் ஐயர் : 12.25 கோடி (கொல்கத்தா)
லியாம் லிவிங்ஸ்டன் : 11.50 கோடி (பஞ்சாப்)
ஷார்துல் தாகூர் : 10.75 கோடி (டெல்லி)
நிக்கோலஸ் பூரான் : 10.75 கோடி (ஹைதெராபாத்)
வணிந்து ஹஸரங்கா : 10.75 கோடி (பெங்களூரு)
ஹர்ஷல் படேல் : 10.75 கோடி (பெங்களூரு)
அவேஷ் கான் : 10 கோடி (லக்னோ)
லாக்கி பெர்குசன் : 10 கோடி (குஜராத்)
பிரசித் கிருஷ்னா : 10 கோடி (ராஜஸ்தான்)

deepak 1

2. 10 கோடி தாண்டிய சென்னை: இந்த ஏலத்தில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹரை 14 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியது. இப்படி ஐபிஎல் நேரடி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 கோடிக்கும் மேல் ஒரு வீரரை வாங்கியது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் வரலாற்றில் நடந்த 14 சீசன்களில் ஒரு முறை கூட எந்த ஒரு வீரரையும் 10 கோடிகளை பயன்படுத்தி அந்த அணி நிர்வாகம் வாங்கியதே கிடையாது. கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த நேரடி ஏலத்தில் ரவீந்திர ஜடேஜாவை அந்த அணி அதிகபட்சமாக 9.72 கோடிகளுக்கு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

3. 10 கோடிகளை தாண்டிய மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போலவே வரலாற்றில் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒரு வீரரை வாங்குவதற்கு முதல் முறையாக இந்த ஏலத்தில் 10 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளது. இந்த ஏலத்தில் இந்திய வீரர் இஷான் கிஷனை 15.25 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு அந்த அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் வாயிலாக இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அத்துடன் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா (16 கோடிகள்) வாங்கும் சம்பளத்திற்கு இணையாக இஷான் கிஷன் சம்பளம் உயர்ந்துள்ளது பிரம்மிக்க வைக்கிறது.

ishan
ishan MI

4. தீபக் சஹர் : இந்த ஏலத்துக்கு முன்பாக எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரையும் தக்க வைக்காத காரணத்தால் எப்படியாவது ஒரு நல்ல வேகப்பந்து வீச்சாளரை முதலில் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தள்ளப்பட்டது. அதன் காரணமாக அந்த அணிக்கு ஏற்கனவே விளையாடி வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த தீபக் சஹரை கடும் போட்டி போட்டு வாங்கிய சென்னை 14 கோடிகளுக்கு ஒப்பந்தம் செய்தது.

- Advertisement -

இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை தீபக் சஹர் படைத்துள்ளார். பொதுவாகவே ஐபிஎல் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் மவுசு என்பது வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களை விட குறைவாகும். அதன் காரணமாகவே வரலாற்றில் மிகப்பெரிய தொகையை எப்போதும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சம்பளமாக பெற்றதில்லை. ஆனால் தீபக் சஹர் அதற்கு விதிவிலக்காக 14 கோடிகளை சம்பளமாக பெற்றுள்ளார். அத்துடன் சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி (12 கோடி) வாங்கும் சம்பளத்தை விட அவர் அதிக சம்பளத்தை வாங்கியுள்ளார் என்பது ஆச்சரியமாகும்.

avesh

5. ஆச்சர்யம் அளித்த அவேஷ் கான்: கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய மண்ணில் நடைபெற்ற ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் பட்டையை கிளப்பிய இளம் வீரர் அவேஷ் கான் அப்போதே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ச்சியாக 140 கீ.மீ வேகத்தில் பந்து வீசிக்கூடிய வல்லமை பெற்ற இவர் கடந்த 2017ஆம் ஆண்டே ஐபிஎல் தொடரில் கால் பதித்து அதன் பின் கடந்த சீசன்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் முக்கிய பந்து வீச்சாளராக விளையாடி வந்தார்.

குறிப்பாக காகிஸோ ரபாடா, அன்றிச் நோர்ட்ஜெ போன்ற தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வண்ணம் டெல்லி அணியில் 3வது வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வந்த அவர் இந்த ஏலத்தில் வெறும் 20 லட்சம் ரூபாய் அடிப்படை விலையில் பங்கேற்றார். இறுதியில் யாரும் எதிர்பாராத வண்ணம் 10 கோடி ரூபாய்களுக்கு லக்னோ அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் நேரடி ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் (அன்கேப்ட் பிளேயர்) என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத எந்த ஒரு வீரரும் இவ்வளவு பெரிய தொகைக்கு விளையாட ஒப்பந்தமானது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement