குறிப்பிட்ட அணியை சேர்ந்த வெளிநாட்டு வீரர்களை மட்டுமே குறிவைத்து எடுத்த சி.எஸ்.கே – என்ன திட்டமா இருக்கும்?

Santner
- Advertisement -

இந்தியாவில் அடுத்த மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ள பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது கடந்த இரு தினங்களாக பெங்களூர் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு தேர்வு செய்தனர். இதன் காரணமாக வீரர்களின் தொகையும் கோடிகளில் பறந்தது.

hugh

- Advertisement -

அப்படி இந்த ஏலத்தில் கலந்து கொண்ட 10 அணிகளும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்து அணிகளை உறுதி செய்துள்ளனர். அந்த வகையில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற சிஎஸ்கே அணியும் தங்களது அணியில் விளையாட விருப்பப்பட்ட வீரர்களை தேர்வு செய்து அமர்க்களப்படுத்தியது.

சிஎஸ்கே அணியில் பொதுவாகவே வயது முதிர்ந்த வீரர்கள் அதிகம் இருப்பார்கள் என்று பேசப்பட்ட வேளையில் தற்போது சிஎஸ்கே அணி பல புதிய இளம் வீரர்களை அணியில் இணைத்து ஆச்சரியப்படுத்தி உள்ளது. முக்கிய வீரர்கள் சிலரை அணியிலிருந்து வெளியேற்றினாலும் அவர்களுக்கு இணையான வீரர்களை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது.

Santner-1

இப்படி சிஎஸ்கே அணி பல வீரர்களை தேர்வு செய்தாலும் வெளிநாட்டு வீரர்களின் மீது பெரிய அளவில் ஆர்வத்தை காட்டவில்லை. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட அணியைச் சேர்ந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே அணி தங்களது முழு கவனத்தையும் செலுத்தியது. அதன்படி நீங்கள் ஏலத்தை கவனித்து இருந்தால் அதனை கண்டிருக்கலாம். முதல் நாள் ஏலத்தில் மிகவும் பார்த்து பார்த்து வீரர்களை தேர்வு செய்த சிஎஸ்கே அணியானது இரண்டாம் நாளில் நியூஸிலாந்து அணியின் வீரர்களை டார்கெட் செய்து ஏலத்தில் தங்களது கவனத்தைச் செலுத்தியது.

- Advertisement -

அப்படி அவர்கள் நியூசிலாந்து வீரர்களை டார்கெட் செய்து 3 வீரர்களை அணியில் தேர்வு செய்துள்ளனர். ஒருவர் ஏற்கனவே சென்னை அணியில் கடந்த சில சீசன்களாகவே தொடர்ந்து இருந்து வரும் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னர். அவரைதவிர்த்து தற்போது புதிதாக சிஎஸ்கே அணிக்கு இணைந்த இரண்டு நியூசிலாந்து வீரர்களில் ஒருவர் டாப் ஆர்டர் பேட்ஸ்மென் டேவான் கான்வே மற்றொருவர் வேகப்பந்துவீச்சாளர் ஆடம் மில்னே சிஎஸ்கே அணி ஒவ்வொரு சீசனிலும் ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரை தேர்வு செய்து அவர்களைத் தொடர்ந்து அணியில் பயன்படுத்தும்.

இதையும் படிங்க : ஏற்கனவே 2 பேர் வெளியேறிய நிலையில் தற்போது டி20 தொடரில் இருந்து மேலும் ஒரு வீரர் விலகல் – அதிர்ச்சி தகவல்

அந்த வகையில் கடந்த ஆண்டு மும்பை அணிக்காக விளையாடிய ஆடம் மில்னேவை தேர்வு செய்தது பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. ஏனெனில் அதிவேகமாக பந்து வீசக்கூடிய இவர் நிச்சயம் சிஎஸ்கே அணிக்கு ஒரு சரியான தேர்வாக இருப்பார் என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி துவக்க வீரராகவும் வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்தும் சிஎஸ்கே இம்முறை துவக்க வீரராக கான்வேவை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்படி அணியின் தேர்வில் மூன்று நியூசிலாந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளதால் இதில் ஏதாவது திட்டம் இருக்குமா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

Advertisement