கெஸ்ட்டாக வரும் சச்சின்.. கம்பேக் கொடுக்கும் சித்து.. தமிழில் கோபிநாத்.. ஐபிஎல் 2024 வர்ணனையாளர்கள் லிஸ்ட் 

Star Sports Commentary
- Advertisement -

உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 2024 தொடர் மார்ச் 22ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. அதில் பரபரப்பாக நடைபெறப்போகும் போட்டிகளை வித்தியாசமாகவும் விவரமாகவும் வர்ணித்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வர்ணனையாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் நடைபெறும் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன.

அதில் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் ஜியோ சினிமா சேனலில் சிறப்பு வர்ணையாளர்களாக செயல்பட உள்ளனர். மேலும் ஜியோ சினிமா சேனலில் கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ், ஷேன் வாட்சன், இயன் மோர்கன், பிரட் லீ, மைக் ஹெசன், அனில் கும்ப்ளே, ராபின் உத்தப்பா, கிரேம் ஸ்மித், ஸ்காட் ஸ்டைரிஸ், சுரேஷ் ரெய்னா, ஜாகீர் கான் போன்ற முன்னாள் நட்சத்திரங்கள் தொடர் முழுவதும் வர்ணிக்க உள்ளனர்.

- Advertisement -

வர்ணனையாளர்கள் பட்டியல்:
அதே போல கணீர் குரலில் பேசக்கூடிய முன்னாள் இந்திய வீரர் நவ்ஜோத் சித்து பல வருடங்கள் கழித்து மீண்டும் ஐபிஎல் இந்தி வர்ணனையில் கம்பேக் கொடுக்க உள்ளார். மேலும் தமிழில் பிரபல தொகுப்பாளரான கோபிநாத் முதல் முறையாக வர்ணனையாளராக செயல்பட உள்ளார். ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளர்களாக செயல்படுபவர்களின் பட்டியல்:

1. சர்வதேசம்: ஸ்டீவ் ஸ்மித், ஸ்டுவர்ட் ப்ராட், டேல் ஸ்டெய்ன், ஜேக் காலில், டாம் மூடி, பால் காலிங்க்வுட்
2. தமிழ்: கிறிஸ் ஸ்ரீகாந்த், எஸ் பத்ரிநாத், முரளி விஜய், முருகன் அஸ்வின், என் ஜெகதீசன், ஆர்ஜே பாலாஜி, யோ மகேஷ், முத்துராமன், கேவி சத்யாராயணன், திருஷ்ட காமினி, கோபிநாத், பாவனா பாலகிருஷ்ணன், சஷ்டிக்கா ராஜேந்திரன்

- Advertisement -

3. இந்தி: ஹர்பஜன் சிங், இர்பான் பதான், அம்பத்தி ராயுடு, சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, வருண் ஆரோன், மித்தாலி ராஜ், முஹம்மத் கைப், சஞ்சய் மஞ்ரேக்கர், இம்ரான் தாஹிர், வாசிம் ஜாபர், குர்கீரத் மன், உன்முக்த் சந்த், ஜட்டின் சப்ரு, ரஜத் பாட்டியா, டீப் தாஸ்குப்தா, விவேக் ராஜ்தான், ராமன் பனோட், பதம்ஜாட் செராவாத், நவ்ஜோத் சிங் சித்து
4. தெலுங்கு: அம்பத்தி ராயுடு மித்தாலி ராஜ், எம்எஸ்கே பிரசாத், வேணுகோபால் ராவ், டிசுமன், கல்யாண் கிருஷ்ணா, ஞானேஸ்வர ராவ், ராகேஷ் தேவ ரெட்டி, டேனியல் மனோகர், சசிகாந்த் அவுலபல்லி, ரவி ராக்லே, ஆனந்த் ஸ்ரீ கிருஷ்ணா, விந்தியா மேடப்படி, கீதா பகத்

5. கன்னடம்: விஜய் பரட்வாஜ், வினய் குமார், குண்டப்பா விஸ்வநாத், ஜெகதீஷ் சுசித், என்சி ஐயப்பா, பவன் தேஷ்பாண்டே, அஃகில் பாலசந்த்ரா, அனில் குமார், சுமேஷ் கோணி, ரூபேஷ் ஷெட்டி, ஷஷாங்க் சுரேஷ், கிரண் ஸ்ரீனிவாஸ், மது மைலன்கோடி
6. மராத்தி: பால் வல்தாட்டி , ஆதித்யா தாரே, நிலேஷ் நட்டு, பிரசாத் ஸ்ரீசாகர், சுனில் வைத்யா
மலையாளம்: ஸ்ரீசாந்த், டினு யோஹன்னான், ஷியஸ் முஹம்மத், விஷ்ணு ஹரிஹரன், சிஎம் தீபக்

இதையும் படிங்க: 7 கோப்பைகள் 133 வெற்றிகள்.. முடிவுக்கு வந்த தல தோனியின் கேப்டன்ஷிப் சகாப்தம்.. புதிய சிஎஸ்கே கேப்டன் அறிவிப்பு

7. குஜராத்: நயன் மோங்கியா, மன்னன் தேசாய், ஆகாஷ் திரிவேதி, கிரட் டாமணி, ஷைலந்த்ரசிங் ஜடேஜா
பங்களா: அசோக் டிண்டா, அபிஷேக் ஜுன்ஜுன்வாலா, கெளதம்பட்டாச்சார்யா, சஞ்சய் பேனேர்ஜி, அர்கா பட்டாச்சார்யா

Advertisement