7 கோப்பைகள் 133 வெற்றிகள்.. முடிவுக்கு வந்த தல தோனியின் கேப்டன்ஷிப் சகாப்தம்.. புதிய சிஎஸ்கே கேப்டன் அறிவிப்பு

MS Dhoni CSK 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் 2024 டி20 தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்குகிறது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் துவங்கும் இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து எம்எஸ் தோனி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்டது முதல் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி இந்தியாவைப் போலவே சிஎஸ்கே அணியிலும் அனைத்து வீரர்களையும் மிகச் சிறப்பாக வழி நடத்தினார். குறிப்பாக கடந்த வருடம் முழங்கால் வலியையும் தாண்டி சிறப்பாக கேப்டன்ஷிப் செய்த அவர் ஐந்தாவது கோப்பையை வென்று சென்னை வெற்றிகரமான அணியாக சாதனை படைக்க உதவினார்.

- Advertisement -

முடிந்த சகாப்தம்:
இருப்பினும் தற்போது 41 வயதை கடந்து விட்ட அவர் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் கடந்த 2019 முதல் விளையாடி சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வீரர் ருதுராஜ் கைக்வாட் கையில் சிஎஸ்கே அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை எம்.எஸ். தோனி ஒப்படைத்துள்ளதாகவும் அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் ஐபிஎல் தொடரில் 2008 – 2023 வரை கேப்டனாக செயல்பட்டு வந்த எம்எஸ் தோனியின் சகாப்தம் நிறைவுக்கு வந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த காலகட்டங்களில் 226 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட தோனி சென்னைக்கு 5 கோப்பைகள் உட்பட 133 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். அவரை தவிர்த்து ரோகித் சர்மா உள்ளிட்ட மற்ற யாருமே 100 வெற்றிகள் கூட பெற்றதில்லை.

- Advertisement -

இது போக 2010, 2014 ஆகிய வருடங்களில் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் தோனி தலைமையில் சிஎஸ்கே வென்றுள்ளது. ஆனால் காலத்திற்கும் விளையாட முடியாது என்பதை உணர்ந்து இந்த முடிவை தோனி எடுத்துள்ளார் என்றே சொல்லலாம். சொல்லப்போனால் 2022இல் ஜடேஜாவிடம் சிஎஸ்கே அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை தோனி ஒப்படைத்தார்.

இதையும் படிங்க: ஐசிசி’க்கே முன்னோடியாக ஐபிஎல் 2024 தொடரில் பிசிசிஐ அறிமுகப்படுத்தும் 2 புதிய ரூல்ஸ்.. விவரம் இதோ

அது ஜடேஜாவுக்கும் சிஎஸ்கே அணிக்கும் பெரிய பின்னடைவை கொடுத்தது. அதனால் மீண்டும் அந்த பதவியை பெற்றுக் கொண்ட தோனி தற்போது ருதுராஜிடம் கொடுத்துள்ளார். குறிப்பாக உள்ளூர் கிரிக்கெட்டில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக செயல்பட்ட அனுபவத்தை கொண்டு ருதுராஜ் 2021 ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பி வென்று சிஎஸ்கே 4வது கோப்பையை வெல்ல உதவினார். எனவே தமக்கு அடுத்தபடியாக அவர் தான் சிஎஸ்கே அணியை வழி நடத்த தகுதியானவர் என்ற கருதி தோனி இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement