ஐசிசி’க்கே முன்னோடியாக ஐபிஎல் 2024 தொடரில் பிசிசிஐ அறிமுகப்படுத்தும் 2 புதிய ரூல்ஸ்.. விவரம் இதோ

IPL Rules
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரலாற்றில் 17வது முறையாக மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்க உள்ளது. இந்த வருடம் கோப்பையை வெல்வதற்கு 10 அணிகள் போட்டியிடுவதால் ரசிகர்களிடம் வழக்கமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக கடந்த 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் தொடர் கடந்த 16 வருடங்களை கடந்து தற்போது உலகில் நம்பர் ஒன் டி20 தொடராக ஜொலித்து வருகிறது.

அதில் காலத்தின் வளர்ச்சிக்கேற்ப சில புதிய விதிமுறைகளையும் பிசிசிஐ அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பேக்ட் வீரர் விதிமுறை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று பல்வேறு போட்டிகளில் புதுமையை ஏற்படுத்தியது. அந்த வரிசையில் 2024 ஐபிஎல் தொடரில் பிசிசிஐ 2 புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது.

- Advertisement -

புதிய ரூல்ஸ்:
அதில் முதலாவதாக வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு 2 பவுன்சர் பந்துகளை வீசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது சமீப காலங்களாகவே டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களின் கைகள் ஓங்கும் அளவுக்கு நோபால் போட்டால் ஃபிரீ ஹிட் போன்ற பல்வேறு அடிப்படை விதிமுறைகள் பவுலர்களுக்கு எதிராக இருப்பதாக விமர்சனங்கள் காணப்படுகின்றன.

எனவே பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமான போட்டியை ஏற்படுத்துவதற்காக இந்த புதிய விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்துகிறது. சொல்லப்போனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவருக்கு அதிகபட்சமாக ஒரு பவுன்சர் பந்தை மட்டுமே வீச முடியும். அந்த வகையில் ஐசிசி மற்றும் உலக கிரிக்கெட்டுக்கு முன்னோடியாக ஐபிஎல் இந்த விதிமுறையை கொண்டு வருவது ரசிகர்களிடம் வரவேற்பை பெறுகிறது.

- Advertisement -

2வதாக “ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்” எனும் விதிமுறையும் 2024 ஐபிஎல் தொடரில் நடைமுறைக்கு வருவதாக பிசிசிஐ கூறியுள்ளது. அதாவது ஒரு தீர்ப்பை டெக்னாலஜியை பயன்படுத்தி மீண்டும் ஆய்வு செய்யும் போது சில தருணங்களில் சரியான ஆதாரங்கள் கிடைப்பதில்லை. அதை தவிர்ப்பதற்காக இந்த விதிமுறை கொண்டு வரப்படுகிறது. இந்த விதிமுறைப்படி ஐபிஎல் 2024 தொடரில் ஒரு மைதானத்தில் அதி வேகமாக நகரக்கூடிய உயர்தர கேமராக்கள் 8 பொருத்தப்பட்டிருக்கும்.

இதையும் படிங்க: 2 நாள் முன்னாடி நேரில் பாத்து பேசுனேன்.. அந்த பிரச்சனை சுத்தமா இல்ல.. தோனியின் பிளான் பற்றி இர்பான் பதான்

அதன் காரணமாக எல்பிடபிள்யூ ரிவ்யூ, ரன் அவுட், அல்ட்ரா எட்ஜ் கேட்ச் போன்ற அனைத்து விதமான தீர்ப்புகளை வழங்குவதற்காக நடுவர்கள் ஒளிபரப்பு நிறுவனங்களின் உதவியை நாட மாட்டார்கள். அதற்கு பதிலாக அம்பயர்களே அந்த 8 கேமராக்களின் உதவியுடன் நேரடியாக மைதானத்தில் நிகழ்ந்ததை தாங்கள் விரும்பும் கோணத்தில் சோதித்துப் பார்த்து துல்லியமான தீர்ப்பு வழங்க முடியும். இந்த 2 விதிமுறைகளும் உலகின் மற்ற டி20 தொடர்களில் இல்லை. ஐபிஎல் தொடரில் தான் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement