2 நாள் முன்னாடி நேரில் பாத்து பேசுனேன்.. அந்த பிரச்சனை சுத்தமா இல்ல.. தோனியின் பிளான் பற்றி இர்பான் பதான்

Irfan Pathan 6
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் எம்எஸ் தோனியின் ஆட்டத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஏனெனில் இந்தியாவுக்காக 3 விதமான உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்த அவர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். அதில் கடந்த வருடம் முழங்கால் வலியுடன் விளையாடிய அவர் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து சென்னை 5வது கோப்பையை வெல்ல உதவினார்.

ஆனால் தற்போது 41 வயதை தாண்டி விட்டதால் இந்த வருடத்துடன் எம்எஸ் தோனி ஓய்வு பெறுவாரா என்ற கேள்வி மீண்டும் காணப்படுகிறது. அது போன்ற சூழ்நிலையில் தோனிக்கு நிகராக சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனாக செயல்படப் போவது யார் என்ற பேச்சுக்களும் காணப்படுகிறது. இருப்பினும் கடந்த 2019 முதலே ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் தோனி தன்னுடைய அனுபவத்தால் வயதை வெறும் நம்பராக்கி தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

நேரில் பார்த்த இர்பான் பதான்:
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தோனியை நேரில் பார்த்ததாக முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். அப்போது முழங்கால் காயம் முழுமையாக குணமடைந்ததால் தோனி 2 மணி நேரங்கள் அதிரடியான சிக்ஸர்களை பறக்க விட்டு பயிற்சிகளை மேற்கொள்வதை பார்த்ததாகவும் கூறும் இர்ஃபான் பதான் சிஎஸ்கே ரசிகர்களுக்கு நல்ல செய்தியை தெரிவித்துள்ளார்.

அதனால் கடந்த வருடத்தை போலவே இம்முறையும் கடைசி நேரத்தில் வந்து குறைந்த பந்துகளை எதிர்கொண்டு அதிரடியாக விளையாடும் திட்டத்தை தோனி கடைப்பிடிப்பார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “கடந்த வருடம் தோனி தன்னுடைய கிரிக்கெட்டை வைத்து ரசிகர்களுக்கு பரிசு கொடுப்பேன் என்று சொன்னார்”

- Advertisement -

“அவரை 2 நாட்களுக்கு முன்பாக பார்த்தேன். அப்போது அவர் 2 மணி நேரங்கள் தொடர்ந்து அதிரடியாக பந்துகளை எதிர்கொண்டு பயிற்சிகள் மேற்கொண்டார். அவருடைய முழங்கால் எப்போதும் போல ஃபிட்டாக உள்ளது. எனவே இது ரசிகர்களுக்கு உற்சாகமான நேரம். அவர் இப்போது தன்னுடைய பழைய தோற்றத்தை கொண்டுள்ளார். எனவே பழைய தோனி நமக்கு கிடைப்பாரா? கடந்த 2 வருடங்களில் அவருடைய வேலை மாறியுள்ளது”

இதையும் படிங்க: பாவம் டெல்லி அணியில் திணறும் அந்த இந்திய வீரரை பாண்டிங் தான் காப்பாத்தனும்.. ப்ராட் ஹோக் கருத்து

“தற்போது லோயர் ஆர்டரில் வரும் அவர் குறைந்த பந்துகளை எதிர்கொண்டாலும் பெரிய ஷாட்டுகளை அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் அடிக்கிறார். அவருடைய இன்னிங்ஸ் சிறியதாக இருந்தாலும் மறக்க முடியாததாக இருக்கிறது. இந்த வருடமும் அதில் பெரிய மாற்றம் இருக்காது என்று நினைக்கிறேன். அந்த வகையில் அவர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தால் குறைகள் இருக்காது” என்று கூறினார்.

Advertisement