பாவம் டெல்லி அணியில் திணறும் அந்த இந்திய வீரரை பாண்டிங் தான் காப்பாத்தனும்.. ப்ராட் ஹோக் கருத்து

Bradd Hogg 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் முதல் கோப்பையை வெல்லும் இலட்சியத்துடன் களமிறங்க உள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ரிஷப் பண்ட் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து விளையாட உள்ளார். கார் விபத்தால் சந்தித்த மிகப்பெரிய காயத்தில் அதிர்ஷ்டத்துடன் உயிர் தப்பிய அவர் 2023 ஐபிஎல், டெஸ்ட் சாம்பியன்ஷி ஃபைனல் மற்றும் உலகக் கோப்பை போன்ற தொடர்களில் விளையாடவில்லை.

இருப்பினும் தற்போது முழுமையாக குணமடைந்து விளையாடும் அவர் கேப்டனாக செயல்படுவார் என்று டெல்லி நிர்வாகம் அறிவித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால் அவருடைய தலைமையில் கோப்பையை வெல்வதற்காக களமிறங்கும் டெல்லி அணிக்கு துவக்க வீரர் டேவிட் வார்னருக்கு நிகராக செயல்பட முடியாமல் பிரிதிவி ஷா தடுமாறுவது பெரிய பின்னடவை ஏற்படுத்தும் என்றே நம்பப்படுகிறது.

- Advertisement -

பாண்டிங் காப்பாத்தணும்:
2018 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று இந்தியாவுக்காக அறிமுகமான அவர் சச்சின், சேவாக், லாரா ஆகியோர் கலந்த கலவை என அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டும் அளவுக்கு அசத்தினார். ஆனால் நாளடைவில் தரமான ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் கிளீன் போல்டாகி ஃபார்மை இழந்த அவர் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார்.

அப்போதிலிருந்து இந்தியாவுக்கு கம்பேக் கொடுப்பதற்காக ரஞ்சிக் கோப்பை, இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி சாம்பியன்ஷிப் போன்ற தொடர்களில் போராடி வரும் அவர் எந்த முன்னேற்றமான செயல்பாடுகளையும் வெளிப்படுத்தவில்லை. ஐபிஎல் தொடரிலும் டெல்லி அணியில் திணறி வரும் அவர் 2023 சீசனில் 8 போட்டிகளில் வெறும் 106 ரன்களை 13.25 என்ற மோசமான சராசரியில் எடுத்தார்.

- Advertisement -

அப்படிப்பட்ட சூழ்நிலையில் நடைபெற்று முடிந்த 2023 ரஞ்சிக் கோப்பையிலும் சுமாராகவே விளையாடிய அவர் நல்ல ஃபார்மில் இல்லாதது டெல்லிக்கு கவலையை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் சுமாரான ஃபார்மில் தவிக்கும் பிரித்வி ஷா’வை டெல்லியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தான் ஃபார்முக்கு கொண்டு வர வேண்டும் என்று ப்ராட் ஹோக் கூறியுள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: அவரும் மனுஷன் தான்.. நானே சொல்றேன் அஸ்வின் மேட்ச் வின்னர்.. அதுக்கு அதான் சாட்சி.. ரோஹித் கருத்து

“ரிக்கி பாண்டிங் முதலில் பிரிதிவி ஷா ஃபார்மை கவனிக்க வேண்டும். தற்சமயத்தில் அவர் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படவில்லை. எனவே அவர் தற்போது விளையாடும் ஆட்டத்தை ரிக்கி பாண்டிங் மாற்ற வேண்டும். அவரிடம் பிரிதிவி ஷா தன்னுடைய தன்னம்பிக்கையை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். குறிப்பாக முதல் 6 ஓவர்களில் பிரிதிவி ஷா விளையாடுவதற்கான திட்டத்தில் பாண்டிங் கண்டிப்பாக வேலை செய்ய வேண்டும். அந்த விஷயத்தில் அவர் மாற்றங்களை ஏற்படுத்தி வார்னரை மெருகேற்றினால் மிடில் ஆடரும் நன்றாக விளையாடும்” என்று கூறினார்.

Advertisement