நடப்பு 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் முதல் நபராக விராட் கோலி படைத்துள்ள மாபெரும் சாதனை – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரிலும் வழக்கம் போலவே தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியுடன் வலம் வருகிறார்.

கடந்த பல ஆண்டுகளாகவே பெங்களூரு அணிக்காக தனி ஒருவனாக அவருக்கே உரித்தான வழியில் விளையாடி வரும் விராத் கோலி இந்த தொடரிலும் தனது பிரமாதமான ஆட்டத்தை தொடர்ச்சியாக ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் இன்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 45-வது லீக் போட்டியிலும் குஜராத் அணிக்கு எதிராக மிகச்சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார்.

அந்த வகையில் இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. பின்னர் 201 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார்.

- Advertisement -

அந்த வகையில் இன்றைய போட்டியின் போது 44 பந்துகளை சந்தித்த அவர் 6 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரி என 70 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த 70 ரன்கள் மூலம் இந்த தொடரில் அவர் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 500 ரன்களை குவித்து இந்த தொடரில் 500 ரன்களை முதலில் கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : 200 ரன்கள் அடித்தும் நாங்கள் பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்திக்க இதுதான் காரணம் – சுப்மன் கில் வருத்தம்

அதோடு இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அவர் விளையாடியுள்ள நான்கு இன்னிங்ஸ்களில் மூன்று அரைசதம் மற்றும் ஒரு சதம் என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement