அவரும் மனுஷன் தான்.. நானே சொல்றேன் அஸ்வின் மேட்ச் வின்னர்.. அதுக்கு அதான் சாட்சி.. ரோஹித் கருத்து

Rohit Sharma 11.jpeg
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் வென்ற இந்தியா ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாகவும் முன்னேறி சாதனை படைத்தது. அந்த தொடரில் தரம்சாலாவில் நடந்த கடைசிப் போட்டியில் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14வது வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை படைத்தார்.

மேலும் அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்த அவர் மொத்தம் 128 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகள் சாய்த்தார். அதன் வாயிலாக தன்னுடைய அறிமுகப் போட்டியிலும் 100வது போட்டியிலும் 5 விக்கெட் ஹால் எடுத்த வீரராக அஸ்வின் உலக சாதனை படைத்தார். ஆனால் 500 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தும் இதுவரை அவருக்கு வெளிநாட்டுப் போட்டிகளில் நிலையான வாய்ப்பு கிடைப்பதில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

- Advertisement -

ரோஹித் கருத்து:
குறிப்பாக ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இடம் பிடித்தும் கடந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அஸ்வின் வெளிநாட்டு போட்டிகளுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்ற பரவலான விமர்சனங்கள் இப்போதும் இருக்கின்றன.

இந்நிலையில் வெளிநாட்டில் விளையாடினாலும் இல்லாவிட்டாலும் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதுகளை வென்றுள்ள அஸ்வின் எப்போதும் மேட்ச் வின்னர் என்று விமர்சகர்களுக்கு கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவர் பேசியது பின்வருமாறு. “ரவி ஆஷ். அவருடைய தரத்தைப் பற்றி அவரின் கேரியரே பேசும். அவர் வென்ற ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை சென்று பாருங்கள்”

- Advertisement -

“அது இந்தியாவுக்காக அஸ்வின் மேட்ச் வின்னராக இருப்பதை உங்களுக்கு தெளிவாக சொல்கிறது. நாங்கள் இந்தியாவில் விளையாடும் அனைத்து நேரங்களிலும் அவர் தன்னுடைய கையை உயர்த்தி அசத்துகிறார். எனவே நீங்கள் சொந்த மண்ணில் விளையாடுகிறீர்களா அல்லது இந்தியாவுக்கு வெளியே விளையாடுகிறீர்களா என்பது முக்கியம் என்று நான் கருதவில்லை. அவர் எவ்வளவு அழுத்தத்தை சந்தித்து வருகிறார் என்பதை கற்பனை செய்து பாருங்கள்”

இதையும் படிங்க: ஒரு முறையாவது அந்த ஃபீலிங் எப்படி இருக்கும்னு அனுபவிக்க நினைக்குறேன் – விராட் கோலி விருப்பம்

“அதாவது ஏதேனும் ஒரு இன்னிங்ஸில் விக்கெட்டுகள் எடுக்காமல் போனால் உடனே அஸ்வின் சிறப்பாக பந்து வீசவில்லை என்று பலரும் பேசுவார்கள். ஆனால் அவரும் மனிதன் தான் பாஸ். இறுதியில் அவரும் தன்னுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சிக்கிறார். இருப்பினும் அழுத்தமான சூழ்நிலைகளை தாண்டி ஒவ்வொரு தொடரிலும் உயர்ந்து செயல்படுவதே அவர் எந்தளவுக்கு தரமான வீரர் என்பதை காட்டுகிறது” என்று கூறினார்.

Advertisement