ஒரு முறையாவது அந்த ஃபீலிங் எப்படி இருக்கும்னு அனுபவிக்க நினைக்குறேன் – விராட் கோலி விருப்பம்

Kohli-1
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நாளை மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இது தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. முதல் போட்டியே இருபெரும் அணிகளுக்கு இடையே நடைபெற இருப்பதினால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளாக ஒரு கோப்பையை கூட கைப்பற்றாத பெங்களூரு அணி இம்முறை கோப்பையை கைப்பற்ற வேண்டிய முனைப்புடன் களமிறங்க காத்திருக்கிறது. இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த மகளிர் ஐபிஎல் தொடரை ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

அதனை தொடர்ந்து ஆண்கள் அணியும் வெற்றி பெற வேண்டும் என்று ஆர்.சி.பி அணியின் ரசிகர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரத்தியேகமான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருந்த விராட் கோலி கூறுகையில் : பெண்கள் பிரீமியர் லீக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதை பார்த்தோம். அந்த கோப்பையை இந்த முறை இரட்டி பார்க்க முடியும் என்று நம்புகிறேன். அதை செய்தால் உண்மையிலேயே சிறப்பு வாய்ந்த தருணமாக இருக்கும்.

- Advertisement -

ஐபிஎல் கோப்பையை வென்று அந்த உணர்வு எவ்வாறு இருக்கும் என்பதை அனுபவிக்க வேண்டும் என்பது எனது கனவு. இம்முறை நிச்சயமாக அந்த கனவு நினைவாகும் என்று நினைக்கிறேன். தற்போதைய பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது.

இதையும் படிங்க : அந்த பையன் தனியாள இந்தியாவை காப்பாத்துனாரு.. சர்பராஸ் அப்பா கூட நானும் விளையாடிருக்கேன்.. ரோஹித் சர்மா

களத்தில் என்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்த முயற்சிப்பேன். மேலும் என்னை கிங் என்று யாரும் அழைக்க வேண்டாம் விராட் என்று அழையுங்கள் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement