அந்த பையன் தனியாள இந்தியாவை காப்பாத்துனாரு.. சர்பராஸ் அப்பா கூட நானும் விளையாடிருக்கேன்.. ரோஹித் சர்மா

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் தொடரை 4 – 1 (5) என்று கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக டி20 போல விளையாடி தோற்கடிப்போம் என்று எச்சரித்த இங்கிலாந்தை கடைசியில் தோற்கடித்த இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. இத்தனைக்கும் அந்த தொடரில் விராட் கோலி, ஷமி, கேஎல் ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் விளையாடவில்லை.

இருப்பினும் அந்த குறை தெரியாத அளவுக்கு ஜெய்ஸ்வால், சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் அசத்தினர். அவர்களுக்கு நிகராக அறிமுகமாக களமிறங்கிய சர்பராஸ் கான், துருவ் ஜுரேல், ஆகாஷ் தீப், தேவ்தூத் படிக்கல் போன்ற இளம் வீரர்களும் அபாரமாக விளையாடி இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினர். இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் இளம் வீரர்களுடன் விளையாடியது தமக்கு மகிழ்ச்சியை கொடுத்ததாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ரோஹித் பெருமிதம்:
அத்துடன் சர்பராஸ் கான் தந்தை நவ்ஷத் கானுடன் சேர்ந்து தம்முடைய இளம் வயதில் மும்பையில் உள்ளூர் தொடர்களில் விளையாடியுள்ளதாகவும் யாரும் அறியாத பின்னணியை ரோகித் சர்மா பகிர்ந்துள்ளார். அத்துடன் 1 – 0 என்ற கணக்கில் பின்தங்கிய சூழ்நிலையில் 2வது போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது தனி ஒருவனாக 209 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் கம்பேக் கொடுத்து இந்தியா வெற்றி பெற உதவியதாகவும் ரோஹித் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “எனக்கும் ராகுல் டிராவிட்டுக்கும் அவர்கள் பதில் கொடுத்த விதம் சூப்பராக இருந்தது. இந்த இளம் வீரர்கள் அறிமுகமானதில் நான் தொலைந்தேன். ஏனெனில் அவர்களுடைய பெற்றோர்களும் அங்கே இருந்ததால் நிறைய உணர்ச்சிகள் காணப்பட்டது. நான் இளமையாக இருந்த போது சர்பராஸ்கான் தந்தையுடன் கங்கா லீக்’கில் விளையாடியுள்ளேன்”

- Advertisement -

“அவருடைய தந்தை இடது கை பேட்ஸ்மேன். அதிரடியாக விளையாடக் கூடிய அவர் மும்பை கிரிக்கெட்டின் வட்டாரத்தில் நன்கு அறியப்படுபவர். தன்னுடைய மகன் இந்தியாவுக்காக விளையாடுவதற்காக அவர் போட்ட கடின உழைப்பை நான் பாராட்ட விரும்புகிறேன். சர்பராஸ் கான் போலவே இந்திய அணியின் அறிமுகத் தொப்பி அவருடைய தந்தைக்கும் சொந்தமானது என்று நான் சொல்ல விரும்புகிறேன்”

இதையும் படிங்க: அந்த பையனுக்கு பிரமோஷன் கொடுத்து.. திறமையை யூஸ் பண்ணிக்கோங்க.. ராஜஸ்தான் அணிக்கு கவாஸ்கர் அட்வைஸ்

“ஜெய்ஸ்வாலின் 209 ரன்கள் அணியின் மொத்த ரன்களில் பாதிக்கும் மேற்பட்டதாகும். அவருக்கு அடுத்த சிறந்த ஸ்கோர் 30 – 40. ஒருவேளை அந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்திருந்தால் அதற்கடுத்து 3 தொடர்ச்சியான போட்டிகளில் வெல்வது கடினம் என்பது எங்களுக்கு தெரியும். அது போன்ற சூழ்நிலையில் ஜெயஸ்வால் மற்றும் பும்ரா உயர்ந்து நின்றனர்” என்று கூறினார்.

Advertisement