அந்த பையனுக்கு பிரமோஷன் கொடுத்து.. திறமையை யூஸ் பண்ணிக்கோங்க.. ராஜஸ்தான் அணிக்கு கவாஸ்கர் அட்வைஸ்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நாளை கோலாகலமாக துவங்கி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகியுள்ளன. அதில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் அணி 2008க்குப்பின் கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் முனைப்புடன் விளையாட உள்ளது. இம்முறை அந்த அணிக்கு இளம் வீரர் ஜெய்ஸ்வால் அசத்தலாக செயல்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏனெனில் கடந்த வருடம் 625 ரன்கள் அடித்து அதிவேகமாக அரை சதம் விளாசி இரட்டை சாதனை படைத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் இதுவரை களமிறங்கிய பெரும்பாலான போட்டிகளில் அசத்தலாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வரும் அவர் சமீபத்திய இங்கிலாந்து தொடரில் 712 ரன்கள் அடித்து தொடர் நாயகன் விருது வென்றார்.

- Advertisement -

கவாஸ்கர் அட்வைஸ்:
அதே போல கடந்த வருடம் ராஜஸ்தான் அணியில் 4 இன்னிங்ஸில் விளையாடிய துருவ் ஜுரேல் 152 ரன்கள் அடித்து அசத்தினார். அதன் காரணமாக சமீபத்திய இங்கிலாந்து தொடரில் அறிமுகமான அவர் முதல் போட்டியிலேயே 42 ரன்கள் அடித்தார். அதை விட 4வது போட்டியில் 90, 39* ரன்கள் அடித்த அவர் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் கடந்த வருடம் 6, 7 போன்ற லோயர் மிடில் ஆர்டரில் விளையாடிய துருவ் ஜுரேலுக்கு இம்முறை பேட்டிங்கில் ப்ரமோஷன் கொடுத்து சற்று மேல் வரிசையில் களமிறங்குவதற்கான வாய்ப்பை ராஜஸ்தான் அணி நிர்வாகம் கொடுக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் அவருடைய திறமையை பயன்படுத்திக் கொள்ளுமாறு ராஜஸ்தானை அறிவுறுத்தும் கவாஸ்கர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“துருவ் ஜுரேல் பேட்டிங் வரிசையில் மேலே களமிறங்குவதற்கு தகுதியான வீரர். இந்த வருடம் அவர் பேட்டிங் செய்யும் விதமும் கடந்த ஐபிஎல் தொடரில் அவர் பேட்டிங் செய்த விதமும் சிறப்பாக இருந்தது. எனவே கண்டிப்பாக அவர் பேட்டிங் வரிசையில் ப்ரமோஷன் பெற வேண்டும்” என்று கூறினார். அத்துடன் ஏற்கனவே அடுத்த எம்எஸ் தோனியாக உருவெடுக்கும் வழியில் துருவ் ஜுரேல் இருப்பதாக இங்கிலாந்து தொடரின் போது கவாஸ்கர் பாராட்டினார்.

இதையும் படிங்க: மலிங்கா அந்த பிரச்சனை இல்ல.. பதிரனா பவுலிங் ஆக்சனில் காயத்துக்கு காரணமாகும் தவறை சுட்டிக்காட்டிய அஸ்வின்

மேலும் இங்கிலாந்து தொடரில் நன்றாக செயல்பட்டு 3 போட்டிகளில் விளையாடியதன் காரணமாக 2023 – 24 இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்தில் துருவ் ஜுரேல் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே இம்முறை ராஜஸ்தான் அணியிலும் அவருக்கு பேட்டிங் வரிசையில் பிரமோஷன கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement