மலிங்கா அந்த பிரச்சனை இல்ல.. பதிரனா பவுலிங் ஆக்சனில் காயத்துக்கு காரணமாகும் தவறை சுட்டிக்காட்டிய அஸ்வின்

Pathirana Malinga
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 6வது கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பதற்கான லட்சியத்துடன் களமிறங்க உள்ளது. இருப்பினும் இம்முறை இலங்கை வீரர் மதிஷா பதிரனா காயத்தால் ஆரம்பக்கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது சிஎஸ்கே அணிக்கு பெரிய பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் தீபக் சஹருக்கு பதிலாக விளையாடும் வாய்ப்பைப் பெற்ற அவர் 19 விக்கெட்டுகளை 19.52 என்ற சிறப்பான சராசரியில் எடுத்து அசத்தினார். குறிப்பாக டெத் ஓவர்களில் துல்லியமாக பந்து வீசி குறைந்த ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் சென்னை ஐந்தாவது கோப்பையை வெல்வதற்கு பவுலிங் துறையில் கருப்பு குதிரையாக செயல்பட்டார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

ஆக்சனில் தவறு:
அதன் காரணமாக பொதுவாகவே சாதாரணமாக யாரையும் பாராட்டாத ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி அவரை அடிக்கடி பாராட்டினார். அந்த நிலையில் சமீபத்தில் காயத்தை சந்தித்த பதிரனா இம்முறை தோனி தலைமையில் விளையாடுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மலிங்காவை போல பந்து வீசும் பதிரனா பவுலிங் ஆக்சனில் உள்ள குறையை ரவிச்சந்திரன் அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதை சரி செய்யாவிட்டால் நீண்ட கால பார்வையில் அவருக்கு இது போன்ற காயங்கள் உண்டாகி பிரச்சனைகள் ஏற்படும் என்றும் அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பந்தை ரிலீஸ் செய்யும் கோணம் அதிகம் கீழே இருப்பது அவரிடம் உள்ள ஒரு பிரச்சினையாகும். அது மலிங்காவிடம் இல்லை. அது அவருடைய முதுகில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பந்தை வெளியிடும் போது அவரது முன் கால் உண்மையில் சரிந்து விடும் அளவுக்கு அதிகமாக வேலை செய்கிறது”

- Advertisement -

“எனவே அது மிகவும் கடினமானது. லசித் மலிங்கா ஒரு அழகான சைட் ஆன் இடத்திற்கு செல்கிறார். அவருடைய முதுகு மற்றும் பாதங்கள் வெள்ளைக் கோட்டுக்கு இணையாக இருக்கும். ஆனால் பதிரனாவுக்கு அது கிடைக்கவில்லை. அதனால் அவருடைய ஆக்சன் உடைகிறது. சுழல்கிறது. அவருடைய உடலில் முறுக்கை ஏற்படுத்துகிறது. அவரை எதிர்கொள்வதில் உள்ள சிக்கல் தன்மையை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் இப்போது அவர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்”

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : சிஎஸ்கேவுக்கு எவ்வளவோ பரவால்ல.. முகமது ஷமிக்கு பதிலாக தமிழ்நாடு வீரரை வாங்கிய குஜராத்

“இது ஆரம்ப காலமாக இருக்கலாம். அவருடைய உடல் இன்னும் அதிகமாக நிரப்பப்பட வேண்டும். ஆனால் அவர் சில ஆபத்தான நிலைகள் மற்றும் சிக்கல்களுக்கு ஆளாகிறார். உண்மையாக மலிங்காவுடன் சேர்ந்து நான் வேலை செய்துள்ளேன். அப்போது பதிரனாவுக்கு நல்ல வாய்ப்புள்ளதாக மலிங்காவே என்னிடம் கூறியுள்ளார். ஆனால் தற்போதைய நிலைமையில் அவர் மோசமான நிலைகளில் பந்து வீசுகிறார்” என்று கூறினார்.

Advertisement