ஐபிஎல் 2024 : சிஎஸ்கேவுக்கு எவ்வளவோ பரவால்ல.. முகமது ஷமிக்கு பதிலாக தமிழ்நாடு வீரரை வாங்கிய குஜராத்

Sandeep Warrier
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி சுப்மன் கில் தலைமையில் களமிறங்கி கோப்பையை வெல்வதற்காக தயாராகி வருகிறது. கடந்த 2022இல் தோற்றுவிக்கப்பட்ட அந்த அணிக்கு முதல் வருடத்திலேயே மிகச்சிறந்த ஆல் ரவுண்டராகவும் கேப்டனாகவும் செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியா இம்முறை மும்பை அணிக்காக விளையாட சென்று விட்டது மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் முகமது ஷமியும் காயத்தால் விளையாட மாட்டார் என்பது குஜராத்துக்கு மிகப்பெரிய அடியாக அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த வருடம் அதிக விக்கெட்டுகளை எடுத்து ஊதா தொப்பியை வென்ற அவர் 2023 உலகக் கோப்பையில் நெருப்பாக பந்து வீசி இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்ததை ரசிகர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

- Advertisement -

தமிழக வீரர்:
இருப்பினும் நாட்டுக்காக வலியை பொறுத்துக் கொண்டு உலகக் கோப்பையிலேயே லேசான காயத்துடன் விளையாடிய அவர் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்காமல் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதிலிருந்து இன்னும் குணமடையாததால் தற்போது ஐபிஎல் 2024 தொடரில் இருந்து அவர் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக குஜராத் அணி அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஷமிக்கு பதிலாக தமிழக வீரர் சந்தீப் வாரியார் 50 லட்சம் அடிப்படை விலைக்கு தங்களுடைய அணிக்காக ஒப்பந்தம் செய்யப்படுவதாகவும் குஜராத் அணி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேரளாவில் பிறந்தாலும் கடந்த 2021 முதல் தமிழ்நாடு அணிக்காக உள்ளூர் அளவில் விளையாடி வரும் சந்திப் வாரியர் முதல் தர கிரிக்கெட்டில் 241, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 94, டி20 கிரிக்கெட்டில் 63 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் ஓரளவு நல்ல அனுபவத்தை கொண்டுள்ளதால் தற்போது முகமது ஷமிக்கு பதிலாக அவர் குஜராத் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது போக ஏற்கனவே குஜராத் அணிக்காக தமிழக வீரர்கள் சாய் சுதர்சன், சாய் கிஷோர் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் விளையாடி வருகின்றனர். அதில் சாய் சுதர்சன் கடந்த வருடம் ஃபைனலில் சென்னைக்கு எதிராக 96 ரன்கள் அடித்து சச்சின் போன்ற ஜாம்பவான்களின் பாராட்டுகளை பெற்றார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : பும்ராவை முந்தி விராட் கோலியை தெறிக்க விடுவேன்னு சொன்ன.. அண்டர்-19 ஹீரோவை தூக்கிய மும்பை

அதன் காரணமாக இந்தியாவுக்காகவும் கடந்த டிசம்பர் மாதம் அறிமுகமான அவர் அரை சதமடித்து அசத்தினார். அந்த வகையில் பெயரில் மட்டும் சென்னையை வைத்துக் கொண்டு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காத சிஎஸ்கே அணியை விட குஜராத் அணியில் தற்போது 4 தமிழக வீரர்கள் உள்ளனர். அதனால் சிஎஸ்கே அணிக்கு பதிலாக குஜராத் எவ்வளவோ பரவாயில்லை என்று சில ரசிகர்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement