என்னையா திட்டுனீங்க.. ஐபிஎல் வரலாற்றில் டேரில் மிட்சேல் யாரும் செய்யாத சாதனை.. உலக சாதனையும் சமன்

Daryl Mitchell
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி ஹைதராபாத்தை 78 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தங்களுடைய 5வது வெற்றியை பதிவு செய்தது. ஏப்ரல் 28ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 213 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 98, டேரில் மிட்சேல் 52, சிவம் துபே 39* ரன்கள் எடுத்தனர்.

பின்னர் சேசிங் செய்த ஹைதராபாத் அணி ஆரம்பம் முதலே சென்னை பவுலர்களின் தரமான பந்து வீச்சில் அதிரடியாக விளையாட முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அதனால் 18.5 ஓவரில் ஹைதெராபாத் அணியை 134 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய சென்னை சிறப்பான வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது.

- Advertisement -

உலக சாதனை சமன்:
ஹைதராபாத்துக்கு அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 32 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக துஷா ர்தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக இந்த வருடம் 14 கோடிக்கு வாங்கப்பட்ட நியூசிலாந்து வீரர் டேரில் மிட்சேல் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வந்தார்.

அதனால் ஒன்று உடனடியாக விளையாடுங்கள் இல்லையேல் அவுட்டாகி செல்லுங்கள் என்று பலமுறை அவரை சிஎஸ்கே ரசிகர்களே சமூக வலைதளங்களில் திட்டினார்கள் என்றே சொல்லலாம். அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் 3வது இடத்தில் களமிறங்கி ஆரம்பத்தில் தடுமாறிய அவர் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி 7 பவுண்டரி 1 சிக்சருடன் தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை அடித்து 52 (32) ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

அதை விட ஃபீல்டிங்கில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்றிச் க்ளாஸென் ஆகிய 3 காட்டடி பேட்ஸ்மேன்கள் கொடுத்த கேட்சை அபாரமாக பிடித்த அவர் சபாஷ் அஹ்மத், கேப்டன் பட் கமின்ஸ் ஆகியோர் கொடுத்த கேட்ச்களையும் பிடித்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அந்த வகையில் இப்போட்டியில் 5 கேட்ச்கள் பிடித்த டேரில் மிட்சேல் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர் என்ற முகமது நபியின் சாதனையை சமன் செய்தார்.

இதையும் படிங்க: 6 நிமிடம் 10 பந்துகள் 100 ரன்ஸ்.. கிறிஸ் கெயிலின் 11 வருட சரித்திரத்தை தூளாக்கிய ஜேக்ஸ்.. 2 மாஸ் சாதனை

இதற்கு முன் 2021 சீசனில் ஹைதராபாத் அணிக்காக முகமது நபி மும்பைக்கு எதிரான போட்டியில் 5 கேட்ச்கள் பிடித்துள்ளார். அத்துடன் இப்போட்டியில் 52 ரன்களும் அடித்த டேரில் மிட்சேல் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் 5 கேட்சுகள் மற்றும் 50+ ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற தனித்துவமான சரித்திர சாதனையும் படைத்துள்ளார். அத்துடன் ஒட்டுமொத்த டி20 போட்டியில் 5 கேட்ச்கள், 50+ ரன்கள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் சமன் செய்தார். இதற்கு முன் 2024 பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் கோமிலா அணிக்காக ஒரு போட்டியில் வில் ஜேக்ஸ் 50+ ரன்கள் மற்றும் 5 கேட்ச்கள் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement