எல்லாத்துக்கும் காரணம் அந்த விதிமுறை தான்.. இல்லைன்னா பிளே ஆஃப் போயிருப்போம்.. ரிஷப் பண்ட் வருத்தம்

Rishabh Pant 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 64வது லீக் போட்டியில் லக்னோவை 19 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து டெல்லி வெற்றி பெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அபிஷேக் போரேல் 58, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 57* ரன்கள் எடுத்த உதவியுடன் 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதை துரத்திய லக்னோ 20 ஓவரில் 189/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

அதன் காரணமாக 13 போட்டிகளில் 7வது தோல்வியை பதிவு செய்த லக்னோவின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு 99% கேள்விக்குறியாகியுள்ளது. மறுபுறம் போராடி வெற்றி கண்ட டெல்லி அணி 14 போட்டிகளில் முடிவில் வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. ஆனால் அந்த அணியின் ரன் ரேட் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளை விட குறைவாக இருக்கிறது.

- Advertisement -

ரிஷப் பண்ட் வருத்தம்:
அதனால் டெல்லி அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பும் 99% பறிபோயுள்ளது என்றே சொல்லலாம். முன்னதாக இந்த வருடம் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடும் ரிஷப் பண்ட் தலைமையில் 3 போட்டிகளில் டெல்லி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி கிடைக்கவில்லை. அதனால் பெங்களூரு அணிக்கு எதிரான கடந்த போட்டியில் விளையாட டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்க்கு ஐபிஎல் நிர்வாகம் தடை விதித்தது.

அந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடாதது எதிர்பார்த்ததை போலவே டெல்லி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தது. அந்த தோல்வி டெல்லி அணியின் ரன் ரேட் குறைவதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் அனைத்து பவுலர்களும் சேர்ந்து மெதுவாக பந்து வீசியதற்காக கேப்டனுக்கு தடை விதிக்கும் விதிமுறையால் கடந்த போட்டியில் தாம் விளையாடாதது டெல்லி அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை பறித்ததாக ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த போட்டியில் நான் விளையாடியிருந்தால் நாங்கள் கண்டிப்பாக வென்றிருப்போம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் கடந்த போட்டியில் நான் விளையாடியிருந்தால் நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும். நாங்கள் இந்த வருடத்தையும் அதிகமான நம்பிக்கையுடன் துவங்கினோம். ஆனால் அணியில் நிறைய காயங்களும் மேடு பள்ளங்களும் ஏற்பட்டன”

இதையும் படிங்க: இந்த தொடர் முழுக்க நாங்க தோக்க காரணம் இதுதான்.. உண்மையை ஒப்புக்கொண்ட – லக்னோ கேப்டன் கே.எல் ராகுல்

“இருப்பினும் அணியாக நீங்கள் அதை அனைத்து நேரங்களிலும் புகார் சொல்ல முடியாது. உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை பயன்படுத்த வேண்டும். உங்களால் சில விஷயங்களை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். ஆனால் சில விஷயங்களை கட்டுப்படுத்த முடியாது” என்று கூறினார். மொத்தத்தில் டெல்லி அணியின் முதல் கோப்பையை வெல்லும் கனவு இந்த வருடமும் உடைந்து போயுள்ளது என்றால் மிகையாகாது.

Advertisement