இந்த தொடர் முழுக்க நாங்க தோக்க காரணம் இதுதான்.. உண்மையை ஒப்புக்கொண்ட – லக்னோ கேப்டன் கே.எல் ராகுல்

KL-Rahul
- Advertisement -

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 64-வது லீக் போட்டியில் விளையாடிய ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் போரல் 58 ரன்களையும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 57 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு லக்னோ அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி இலக்கினை நோக்கி விளையாடிய லக்னோ அணியானது துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மிகப்பெரிய சரிவை சந்தித்தது.

இருப்பினும் பூரான் மற்றும் அர்ஷத் கான் ஆகியோரது அதிரடியான ஆட்டம் காரணமாக லக்னோ அணியானது டீசன்டான ஸ்கோரை எட்டியது. இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை குவித்து 19 ரன்கள் வித்யாசத்தில் தோல்வியை தழுவியது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 61 ரன்களையும், அர்ஷத் கான் 58 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் : இந்த போட்டியின் முதல் ஓவரிலேயே நாங்கள் பிரேசர் மெக்கர்க் விக்கெட்டை கைப்பற்றியதின் மூலம் நல்ல துவக்கத்தை பெற்று இருந்தோம். ஆனால் அபிஷேக் போரல் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் – சஞ்சு சாம்சன் ஆகியோரில் 2024 டி20 உ.கோ முதன்மை விக்கெட் கீப்பர் யார்? கம்பீர் தேர்வு

இருப்பினும் 200 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் எட்டக்கூடிய ஒன்றுதான். ஆனால் இந்த தொடர் முழுவதுமே எங்களுக்கு ஒரு பிரச்சனை இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த போட்டியிலும் பவர்பிளேவில் நிறைய விக்கெட்டுகளை இழந்தோம். அதன் காரணமாகவே இந்த போட்டியில் நாங்கள் தோல்வியையும் சந்தித்தோம் என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடப்பட்டது.

Advertisement