அவர் ரொம்பவே கஷ்டப்படுத்திட்டாரு.. லக்னோ அணிக்கெதிரான வெற்றி குறித்து பேசிய – ரிஷப் பண்ட் பேட்டி

Pant
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 64-வது லீக் போட்டியானது நேற்று டெல்லி நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் போரல் 58 ரன்களையும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 57 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்ததால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 61 ரன்களையும், அர்ஷத் கான் 58 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : இந்த போட்டியின் போது பூரான் சிறப்பாக விளையாடி எங்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தினார். இருந்தாலும் நாங்கள் சில திட்டங்களை சரியாக பயன்படுத்தினோம். இந்த ஸ்கோர் வெற்றிக்கு போதுமானதாகவே இருந்தது.

- Advertisement -

பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களை போட்டிக்குள் வைத்திருந்தனர். இந்த தொடரின் ஆரம்பத்தில் நாங்கள் நிறைய நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் சில வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியாதது பின்னடைவை தந்தது. அதேபோன்று கடந்த போட்டியில் நான் இருந்திருந்தால் நிச்சயம் பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பு இருந்திருக்கும்.

இதையும் படிங்க : ஆரம்பத்திலேயே ராகுல் செஞ்ச தவறால் லக்னோ பிளே ஆஃப் தவற விட்ருச்சு.. முகமது கைப் விமர்சனம்

உண்மையிலேயே இந்த தொடரில் நாங்கள் சிறப்பாகவே விளையாடி வந்துள்ளோம். இந்தியா முழுவதும் எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு பின்னர் மீண்டும் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement