ஆரம்பத்திலேயே ராகுல் செஞ்ச தவறால் லக்னோ பிளே ஆஃப் தவற விட்ருச்சு.. முகமது கைப் விமர்சனம்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 14ஆம் தேதி நடைபெற்ற 64வது லீக் போட்டியில் லக்னோவை 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அபிஷேக் போரேல் 57, ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 57* ரன்கள் எடுத்த உதவியுடன் 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதை துரத்திய லக்னோ அதிரடியாக விளையாட முயற்சித்து 20 ஓவரில் 189/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதனால் தோல்வியை சந்தித்த அந்த அணி கடைசி போட்டியில் வென்றாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை 99% இழந்துள்ளது. அதே போல வெற்றி பெற்ற டெல்லி அணியும் கூட 14 போட்டிகளில் 7 வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. அதனால் இப்போட்டியில் வென்றும் அந்த அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

- Advertisement -

கேஎல் ராகுல் தவறு:
முன்னதாக இந்த சீசனில் ஆரம்பத்தில் நிறைய வெற்றிகளை பெற்ற லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்தில் இருந்தது. ஆனால் கடைசியாக விளையாடிய ஐந்து போட்டியில் ஒரு வெற்றி மட்டுமே பெற்ற அந்த அணி 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. இந்நிலையில் போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற ராகுல் முதலில் பேட்டிங் செய்யாமல் தவறு செய்தது லக்னோ அணியின் தோல்விக்கு காரணமானதாக முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் கடைசி 4 போட்டிகளில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணி வென்றதாக கைப் கூறியுள்ளார். எனவே இந்த வாழ்வா – சாவா போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களை அடித்திருந்தால் டெல்லியை தோற்கடித்திருக்கலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “வீடியோ அனலைஸ்ட், கம்ப்யூட்டர் போன்றவற்றை தூரமாக தூக்கி எறியுங்கள். நீங்கள் புள்ளிவிவரங்களை வைத்துப் போட்டியில் விளையாட செல்லக்கூடாது”

- Advertisement -

“200 ரன்கள் இங்கே வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்டதில்லை. இந்த வருடத்தின் உண்மையான புள்ளி விவரங்களை நான் சொல்கிறேன். இம்மைதானத்தில் விளையாடப்பட்ட அனைத்து 4 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன. ஆனால் இங்கே டாஸ் வென்ற நீங்கள் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தீர்கள். எனவே டாஸ் முடிவெடுக்கும் போதும் மிகப்பெரிய தவறு நடந்துள்ளது”

இதையும் படிங்க: அந்த ரூல்ஸ் இருக்குறதால தான் பல இந்திய வீரர்களுக்கு சேன்ஸ் கிடைக்குது.. அதை நீக்க வேண்டாம் – ரவி சாஸ்திரி ஆதரவு

“இந்தப் போட்டியில் லக்னோ வெற்றி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகள் இருந்தது. ஆனால் இப்போட்டியில் லக்னோ ஃபிளாப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல டெல்லி மைதானம் இந்த வருடம் பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருகிறது. எனவே முதலில் பேட்டிங் செய்திருந்தால் லக்னோ வெற்றி வாய்ப்பு அதிகரித்திருக்கலாம்.

Advertisement