இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. முன்பு இப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நடைபெற்று வரும் நடப்பு சீசனானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏகப்பட்ட சாதனைகளும், அற்புதமான ஆட்டங்களும் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன.
இந்த 2024-ஆம் ஆண்டு சீசனில் 260 ரன்கள் அடித்தால் கூட அதனை வெற்றிகரமாக துரத்தி சேசிங் செய்யும் அணிகளையும் பார்க்க முடிகிறது. அதேபோன்று 200 ரன்கள் அடித்தால் அது பாதுகாப்பான ஸ்கோர் கிடையாது என்பதையும் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
அந்த அளவிற்கு இந்த ஐபிஎல் தொடர் ஹை ஸ்கோரிங் போட்டிகளாக நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணமே இம்பேக்ட் விதி தான் என்று பல்வேறு அணிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஏனெனில் இம்பேக்ட் ப்ளேயர் விதிமுறை மூலம் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் வருவதால் பேட்ஸ்மேன்கள் விக்கெட் விழுவதை கணக்கில் கொள்ளாமல் அதிரடியாக அடித்து விளையாடுகின்றனர்.
இதன் காரணமாக பெரும்பாலும் பவுலர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இம்பேக்ட் விதிமுறை வீரர்களுக்கு சாதகமானது தான் என்று ஒரு சில முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இம்பேக்ட் விதிமுறை காலத்திற்கு ஏற்ற ஒன்றுதான் என்றும் அதனை மாற்றக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இம்பேக்ட் விதி மிகவும் முக்கியமான ஒன்று. காலம் மாற மாற நீங்களும் விதிமுறைகளை மாற்றிக்கொண்டு தான் இருக்க வேண்டும். அப்போதுதான் போட்டிகளில் சுவாரசியம் ஏற்படும். அந்த வகையில் மற்ற விளையாட்டில் பல மாறுதல்கள் வந்து கொண்டிருக்கும் போது கிரிக்கெட்டிலும் சில மாறுதல்கள் தேவைப்படுகிறது.
இதையும் படிங்க : சி.எஸ்.கே-வில் இருந்து வெளிய வாங்க.. ஸ்டீபன் பிளமிங்கிற்கு ஸ்கெட்ச் போடும் பி.சி.சி.ஐ – விவரம் இதோ
இம்பேக்ட் விதிமுறை என்பது நிச்சயம் தேவையான ஒன்றுதான். ஏனெனில் இந்த விதிமுறையின் மூலம் பல்வேறு இந்திய வீரர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் மட்டுமே போட்டியும் கூடுதல் சுவாரசியத்தை கொடுக்கிறது என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.



