இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிடின் பதவிக்காலமானது எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. அதன்பிறகு புதிய தலைமை பயிற்சியாளருக்கான பதவிக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அறிவித்திருந்தது.
அதோடு அடுத்த பயிற்சியாளர் குறித்த தேடலும் தற்போது துவங்கியுள்ளது. மேலும் ராகுல் டிராவிட் தொடர்ந்து இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட விருப்பம் தெரிவிக்காத நிலையில் தற்போது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ஜாம்பவான்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பதவிக்கு பல்வேறு முன்னாள் ஜாம்பவான்களும் போட்டியில் இருக்கும் வேளையில் பிசிசிஐ புதிய திட்டம் ஒன்றினை கையில் வைத்துள்ளது. அதாவது ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற பயிற்சியாளரான சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கை இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கும் எண்ணத்தில் பி.சி.சி.ஐ காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி விளையாடின தகவலில் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிகரமான பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங்கிடம் இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகமான பி.சி.சி.ஐ பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் இருப்பினும் அந்த பேச்சுவார்த்தைக்கு அவர் எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
உலகெங்கிலும் நடைபெற்று வரும் பல்வேறு பிரான்சைஸி கிரிக்கெட் தொடர்களின் பயிற்சியாளராக இருந்து வரும் பிளமிங் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பினை ஏற்றால் கிட்டத்தட்ட 10 மாதங்கள் இந்திய அணியுடனே பயணிக்க வேண்டியிருக்கும் எனவே இந்த பெரிய பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வாரா? அல்லது மாட்டாரா? எனபது அவரது தனிப்பட்ட விருப்பம் தான்.
இதையும் படிங்க : 4வது இடத்தை பிடிக்க நாக் அவுட்டில் மோதும் சிஎஸ்கே – ஆர்சிபி.. குறுக்கே வரும் மழை.. 80% வெற்றி யாருக்கு?
இருப்பினும் பி.சி.சி.ஐ யின் அந்த சலுகையை பிளெமிங் ஏற்கமாட்டார் என்றே தெரிகிறது. இருந்தாலும் தற்போது பிசிசிஐ ஸ்டீபன் பிளெமிங்கை அடுத்த பயிற்சியாளராக நியமிக்க நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.