மும்பை, கொல்கத்தா அணிகளுக்கு அடுத்து சேப்பாக்கத்தில் வரலாறு படைத்த சி.எஸ்.கே – கோட்டைனா சும்மாவா?

CSK-vs-SRH
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எப்போதுமே சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் ஒரு கோட்டையாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடைபெற்று வரும் நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் சென்னை அணி தங்களது சொந்த மண்ணான சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் போட்டிகளில் பெரும்பாலும் வெற்றியை பெற்று வருகிறது.

இந்த ஆண்டு லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வி அடைந்ததை தவிர்த்து அனைத்து போட்டியிலும் வெற்றியை மட்டுமே ருசித்து வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

- Advertisement -

ஹைதராபாத் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமான வெற்றியை ருசித்தது. அதோடு இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் தங்களது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தும் அசத்தியது. முதல் 8 போட்டிகளில் முடிவில் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்றிந்ததால் ஆறாவது இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்போது ஹைதராபாத் அணிக்கு எதிரான பெற்ற வெற்றியின் மூலம் 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 212 ரன்களை குவிக்க 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு சன் ரைசர்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்கு பிடிக்காத சன் ரைசர்ஸ் அணியானது 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : என்னையா திட்டுனீங்க.. ஐபிஎல் வரலாற்றில் டேரில் மிட்சேல் யாரும் செய்யாத சாதனை.. உலக சாதனையும் சமன்

இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை சிஎஸ்கே அணி சேப்பாக்கம் மைதானத்தில் பெற்ற வெற்றியின் மூலம் ஒரே மைதானத்தில் அதிக வெற்றிகளை பெற்ற மூன்றாவது அணியாக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னதாக மும்பை அணி வான்கடே மைதானத்தில் 51 வெற்றிகளையும், கே.கே.ஆர் அணி ஈடன் கார்டன் மைதானத்தில் 50 வெற்றிகளையும் பெற்றிருந்த வேளையில் தற்போது சென்னை அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் 50-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement