இனிமே என்கிட்ட எதுவும் கேட்காத.. மைதானத்தில் வைத்தே ருதுராஜுக்கு அட்வைஸ் கொடுத்த தோனி – பத்ரிநாத் பகிர்ந்த தகவல்

Badrinath
- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் துவங்கிய 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு ஒரு சில நாட்கள் முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து நடப்பு ஆண்டிற்கான சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையில் தற்போது சிஎஸ்கே அணியானது குறிப்பிடும் அளவிற்கு சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.

இருப்பினும் இதுவரை அவர்கள் விளையாடியுள்ள 8 போட்டிகளில் நான்கு வெற்றி மற்றும் நான்கு தோல்விகள் உடன் 8 புள்ளிகளை ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. எனவே சென்னை அணிக்கு இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிளேஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில் இனிவரும் போட்டிகளில் சென்னை அணி சிறப்பாக விளையாட வேண்டிய அவசியத்தில் உள்ளது.

- Advertisement -

இவ்வேளையில் இன்று ஏப்ரல் 28-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. தற்போது புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ள சி.எஸ்.கே இன்னும் ஒரு சில போட்டிகளில் தோல்வியை சந்தித்தால் கூட பிளே ஆப் சுற்றிற்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும். இப்படி புதிய கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்ட முதல் ஆண்டே சிஎஸ்கே அணி ப்ளேஆப் சுற்றிற்கு முன்னேறவில்லை எனில் அது ரசிகர்கள் மத்தியில் பெரிய விமர்சனங்களை எழுப்பும்.

இந்நிலையில் தற்போதே சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பதட்டத்தில் இருப்பதாக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான பத்ரிநாத் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது ஒரு கட்டத்தில் லக்னோ அணி வெற்றியை நோக்கி சென்ற வேளையில் ருதுராஜ் பதட்டம் அடைந்தார். அப்போது பௌலிங் மாற்றம், பீல்டிங் மாற்றம் குறித்த ஆலோசனைகளை தோனியிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த சமயத்தில் சம்மதம் தெரிவித்த தோனி பௌலர்கள் மாற்றம் குறித்தும், பீல்டர்கள் மாற்றம் குறித்த திட்டத்தையும் எடுத்துரைத்தார்.

- Advertisement -

ஆனால் அடுத்த சில வினாடிகளிலேயே உடனடியாக ருதுராஜிடம் அடுத்து வரும் போட்டிகளில் என்னிடம் இது போன்ற ஆலோசனை கேட்க வேண்டாம் என்று தோனி நேரடியாக கூறிவிட்டதாகவும் பத்ரிநாத் தெரிவித்துள்ளார். ஏனெனில் அழுத்தமான சூழ்நிலைகளில் கேப்டன் தன்னிச்சையான முடிவை எடுத்தால் மட்டுமே அவரால் எந்த ஒரு நேரத்திலும் அணியை தாங்கி செல்ல முடியும். எனவே தற்சார்பாக ருதுராஜ் சிறப்பான முடிவுகளை எடுப்பதற்கு இது போன்ற பாடங்கள் தேவை என்பதால் தான் அவரையே முடிவெடுக்க சொல்லி தோனி கடைசியாக ஒருமுறை அட்வைஸ் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : ஒருசில ஆட்டத்தை வச்சி அவரு அவ்ளோதானு முடிவு பண்ணிடாதீங்க.. சீனியர் வீரருக்கு ஆதரவாக பேசிய – மைக்கல் ஹசி

இனிவரும் போட்டிகளில் ருதுராஜ் தன்னிச்சையாக முடிவு எடுத்தால் மட்டுமே அவரால் இக்கட்டான நேரங்களில் சிறப்பாக கேப்டன்சி செய்ய முடியும் என்பதாலும் தோனி அவ்வாறு செய்துள்ளார் என்று தெரிகிறது. தோனியுடன் கடந்த பல ஆண்டுகளாக பயணித்து வரும் ருதுராஜ் நிச்சயம் இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்று சென்னை அணியை பிளேஆப் சுற்றுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement