நான் தான் சிஎஸ்கே அணிக்கு நன்றி சொல்லனும்.. அவரோட சேர்ந்து பிளான் பண்ணேன்.. ஆட்டநாயகன் சிமர்ஜித் பேட்டி

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 12ஆம் தேதி நடைபெற்ற 61வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 141/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 47*, துருவ் ஜுரேல் 28 ரன்கள் எடுத்தனர்.

சென்னை சார்பில் அதிகபட்சமாக சிமர்ஜித் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 142 ரன்கள் சேசிங் செய்த சென்னை அணிக்கு ரச்சின் ரவீந்தரா 27, டேரில் மிட்சேல் 22, சிவம் துபே 18, சமீர் ரிஸ்வி 15* ரன்களை அதிரடியாக எடுத்தனர். அவர்களுடன் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 42* (41) ரன்கள் எடுத்ததால் 18.2 ஓவரிலேயே 145/5 ரன்கள் எடுத்த சென்னை போராடி வெற்றி பெற்றது.

- Advertisement -

சென்னைக்கு நன்றி:
அதனால் 13 போட்டிகளில் 7வது வெற்றியை பதிவு செய்த சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய சிமர்ஜித் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

குறிப்பாக ஜெய்ஸ்வால் 24, ஜோஸ் பட்லர் 21, சஞ்சு சாம்சன் 15 என ராஜஸ்தானின் டாப் 3 அதிரடி பேட்ஸ்மேன்களை அவர் ஆரம்பத்திலேயே குறைந்த ரன்களில் அவுட்டாக்கினார். போதாகுறைக்கு பிட்ச் ஸ்லோவாக இருந்ததால் அதிலிருந்து மீள முடியாத ராஜஸ்தான் 150 ரன்களை தாண்ட முடியாமல் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் கடந்த வருடம் காயத்தை சந்தித்த போது மிகவும் அக்கறையுடன் சிகிச்சைக்கு உதவிய சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக சிமர்ஜித் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் பிட்ச்சை பார்த்து கேப்டன் ருதுராஜுடன் சேர்ந்து திட்டம் வகுத்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சிஎஸ்கே அணி நிர்வாகம் உடற்பயிற்சியாளர்கள் மற்றும் என்னுடைய பயிற்சியாளருக்கு மிகவும் நன்றி. காயத்தை சந்தித்த போது மொத்த வருடமும் அவர்கள் என்னை நன்றாக நடத்தினார்கள். பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை பார்த்த பின் கேப்டன் முடிவு செய்தார். நாங்கள் எங்களுடைய திட்டத்தில் நின்றோம்”

இதையும் படிங்க: 142 ரன்ஸ் சேசிங்கில் தடுமாறிய சிஎஸ்கே.. நங்கூரமாக காப்பாற்றிய ருதுராஜ்.. ஜடேஜா பரிதாப சாதனை

“மிடில் ஓவர்களில் பந்து வீசுவதற்கான வாய்ப்பு கிடைத்ததற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும். பிட்ச்சை பார்த்த பின் நான் கேப்டனிடம் பேசினேன். அதன் பின் என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் பேசி முடிவெடுத்தோம்” என்று கூறினான். இதைத்தொடர்ந்து தங்களுடைய கடைசிப் போட்டியில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லலாம் என்ற நிலையில் சென்னை இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement