முக்கிய போட்டியில் 77/7.. ஆர்சிபி’க்கு ஏமாற்றத்தை கொடுத்த டிகே மோசமான சாதனை.. டெல்லி அசத்தல் கம்பேக்?

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 12ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் 62வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின. அப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு கேப்டன் டு பிளேஸிஸ் 6 (7) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 27 (13) ரன்கள் எடுத்த போது இஷாந்த் சர்மா வேகத்தில் ஆட்டமிழந்தார். அதனால் 36/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய பெங்களூரு அணிக்கு அடுத்ததாக கேமரூன் கிரீன் மற்றும் ரஜத் படிடார் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். அந்த வகையில் 3வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி சரிவை சரி செய்தது.

- Advertisement -

மோசமான சாதனை:
அதில் 3 பவுண்டரி 3 சிக்சரை பறக்க விட்ட ரஜத் படிடார் அதிரடியாக விளையாடி அரை சதமடித்து 52 (32) ரன்களில் ஆட்டமிழந்தார். அதே போல அடுத்ததாக வந்த மகிபால் லோம்ரர் அதிரடியாக விளையாட முயற்சித்து 13 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த தினேஷ் கார்த்திக் ஃபினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கலீல் அகமது வேகத்தில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இதையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் அவர் மொத்தம் 18 முறை டக் அவுட்டாகியுள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற ரோகித் சர்மா மற்றும் கிளன் மேக்ஸ்வெல் ஆகியோரது சாதனையை தற்போது முழுவதுமாக தினேஷ் கார்த்திக் தன்னுடைய பெயரில் எழுதியுள்ளார். அந்த பட்டியல்:
1. தினேஷ் கார்த்திக் : 18*
2. கிளன் மேக்ஸ்கேல் : 17
3. ரோஹித் சர்மா : 17
4. பியூஸ் சாவ்லா : 16
5. சுனில் நரேன் : 16

- Advertisement -

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்ததாக வந்த ஸ்வப்னில் சிங் 0, கரண் சர்மா 6, முகமத் சிராஜ் 0 ரன்களில் அவுட்டானார். இறுதியில் கேமரூன் கிரீன் 32* (24) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் பெங்களூரு 187/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக முதல் 10 ஓவரில் 110/2 ரன்கள் அடித்த அந்த அணி கண்டிப்பாக 200 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: பகல்நேர போட்டியில் அதை கண்டுபிடிக்கவே முடியல.. அந்த சத்ததுக்கு நாங்க அதிர்ஷ்டம் பண்ணிருக்கனும்.. மிட்சேல் பேட்டி

ஆனால் அதன் பின் சுமாராக விளையாடிய பெங்களூரு கடைசி 10 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட டெல்லி சார்பில் அதிகபட்சமாக ரசிக் சலாம் மற்றும் கலீல் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து டெல்லி 188 ரன்களை சேசிங் செய்து வருகிறது.

Advertisement