அதே தவறை மீண்டும் செய்துள்ள நீங்க என்னைக்குமே கப் ஜெயிக்க மாட்டீங்க – தனது முன்னாள் ஐபிஎல் அணியை விளாசிய கிறிஸ் கெயில்

Gayle
- Advertisement -

உலகப்புகழ் பெற்ற ஐபிஎல் தொடரின் 16வது சீசன் 2023ஆம் ஆண்டு இந்தியாவிலேயே நடைபெறும் நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சியில் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15ஆம் தேதியன்று வெளியிட்டன. அதில் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா உரிமையாளராக இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் வழக்கம் போல இந்த வருடம் பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்லாத காரணத்தால் பதற்றமடைந்து முதல் முறையாக கேப்டனாக அறிவித்திருந்த மயங் அகர்வாலை அந்த பதவியிலிருந்து நீக்கியது மட்டுமல்லாமல் மொத்தமாக அணியிலிருந்து கழற்றி விட்டது.

Agarwal

- Advertisement -

ஆனால் 2019, 2020, 2021 சீசன்களில் தொடர்ந்து 400, 500 ரன்கள் குவித்து அசத்திய அவர் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்து அனுப்பவமில்லாத காரணத்தால் பஞ்சாப் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதும் சந்தித்த அழுத்தத்தால் ஃபார்மை இழந்து பெரிய அளவில் ரன்களை குவிக்க தடுமாறினார். இருப்பினும் தம்முடைய ஓப்பனிங் இடத்தை ஜானி பேர்ஸ்டோ போன்ற வீரர்களுக்காக தியாகம் செய்த அவர் நல்ல கேப்டனுக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்டார். அத்துடன் பொதுவாகவே கேப்டனாக பொறுப்பேற்பவர் குறைந்தது 2 – 3 சீசன்களில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றால் தான் நிலையான அணியை அமைத்து கோப்பை வென்று கொடுக்க முடியும்.

என்னைக்குமே ஜெயிக்க மாட்டீங்க:
ஆனால் முதல் சீசனில் சொதப்பியதால் மறு வாய்ப்பு கொடுக்காத பஞ்சாப் நிர்வாகம் அவரை மொத்தமாக கழற்றி விட்டது பல ரசிகர்களையும் சஞ்சய் மஞ்ரேக்கர் போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் கடுப்பாக வைத்தது. முன்னதாக கடந்த 2008 முதல் ஒரு சில தோல்விகளை சந்தித்ததும் பதற்றமடைந்து அதிரடியான மாற்றங்கள் என்ற பெயரில் அணியை மொத்தமாக கலைப்பதை வழக்கமாக வைத்துள்ள பஞ்சாப் நிர்வாகம் வரலாற்றிலேயே அதிக கேப்டன்களை மாற்றிய ஐபிஎல் அணியாக கருதப்படுகிறது.

Gayle-1

அப்படி அடிக்கடி அதிரடி மாற்றங்கள் செய்வதாலேயே இதுவரை அந்த அணியால் வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை என்பதும் நிதர்சனமாகும். இந்நிலையில் மயங் அகர்வால் நீக்கப்பட்டது எந்த வகையிலும் சரியல்ல என்று தெரிவிக்கும் டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் தாம் விளையாடிய காலத்திலும் பஞ்சாப் அணியில் அடிக்கடி பட்டி டின்கரிங் வேலைகள் நடைபெற்றதாக கூறியுள்ளார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்று உலகமே அறிந்த கிறிஸ் கெயிலை 2020, 2021 சீசன்களில் 3வது இடத்தில் களமிறக்கிய கொடுமையும் பஞ்சாப் அணியில் அரங்கேறியது.

- Advertisement -

அதனாலேயே 2021 சீசனில் தம்மை வழி நடத்திய விதம் பிடிக்காமல் பாதியிலேயே வெளியேறிய கிறிஸ் கெயில் இதே போல் நடந்து கொண்டால் எப்போதுமே உங்களால் கோப்பையை வெல்ல முடியாது என்ற வகையில் பஞ்சாப் அணி நிர்வாகத்தை சமீபத்திய பேட்டியில் விமர்சித்தது பின்வருமாறு. “மயங் அகர்வால் நிச்சயமாக ஏதேனும் அணியில் வாங்கப்படுவார். ஒருவேளை அதில் நடைபெறாமல் போனால் நான் மிகவும் ஏமாற்றமடைவேன். ஏனெனில் அவர் மிகவும் அதிரடியான வீரர். அதை விட கேப்டனாக செய்த தியாகத்தையும் தாண்டி பஞ்சாப் நிர்வாகம் அவரை தக்க வைக்காமல் இப்படி நடந்து கொண்டதற்காக அவர் நிச்சயமாக மனதளவிலான காயத்தை சந்தித்திருப்பார்”

“ஆனால் அவரை வேறு அணிகள் நல்ல தொகைக்கு வாங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் எப்போதுமே அணிக்காக பாடுபடக் கூடியவர். அதை விட அவர்கள் (பஞ்சாப்) அடிக்கடி மாற்றங்களை நிகழ்த்துவது மிகவும் அபத்தமானது. அவர்கள் தொடர்ந்து மாற்றங்களை செய்து கொண்டே இருக்கிறீர்கள். குறிப்பாக ஒரு போட்டியில் வென்றாலும் அடுத்த போட்டியில் அதே 11 வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை”

இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆவது வீரராக மாபெரும் சாதனை பட்டியலில் இணைந்த – சத்தீஸ்வர் புஜாரா

“சில சமயங்களில் அவர்கள் ஒரே மாதிரி அணியை விளையாடினாலும் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்வதால் அதில் இருக்கும் பெரும்பாலான வீரர்கள் பாதுகாப்பாக உணர்வதில்லை. ஏற்கனவே அழுத்தமாக இருக்கும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் வாய்ப்பு பெறும் வீரர்கள் அவர்கள் கொண்டுள்ள அணுகுமுறையால் அதிக அழுத்தத்தை சந்திக்கிறார்கள். அப்படி அழுத்தம் இருந்தால் உங்களது அணிக்காக விளையாடும் வீரர்கள் செழிப்பாக விளையாடுவதை நீங்கள் எப்போதுமே காண முடியாது” என்று கூறினார்.

Advertisement