- Advertisement -
ஐ.பி.எல்

ஐ.பி.எல் ஏலத்தில் ரிஷப் பண்ட் 26 கோடி வரை செல்வார்.. ஏன் தெரியுமா? – ஆகாஷ் சோப்ரா விளக்கம்

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது எதிர்வரும் நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதி சவுதி அரேபியாவில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டன.

ரிஷப் பண்ட் 26 கோடி வரை செல்வார் :

அந்த வகையில் அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் குறிப்பிட்ட சில மாற்றங்களை செய்தது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் தக்கவைக்கப்படாதது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

- Advertisement -

அதோடு அவர் ஏலத்தில் பங்கு பெற இருப்பதும் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்ட் எந்த அணிக்காக வாங்கப்படுவார்? எவ்வளவு தொகைக்கு செல்வார் என்று பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் நிச்சயம் 26 கோடி வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் மெகா ஏலத்தில் என்னை பொறுத்தவரை 25 முதல் 25 கோடி வரை எளிதாக செல்வார் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

ஆர்.சி.பி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரு அணிகளில் ஒன்று அவரை வாங்கும். ஏனெனில் ஆர்சிபி அணி தங்களது கைகளில் 83 கோடி வைத்துள்ளது. அதேபோன்று பஞ்சாப் அணி 110 கோடி ரூபாய் வைத்துள்ளது. எனவே இவர்கள் இருவரும் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பண்டை வாங்குவதற்கு போட்டி போடுவார்கள்.

இதையும் படிங்க : அக்சர் படேலுக்கு பதிலாக இந்திய அணியில் ரமன்தீப் சிங் அறிமுகமாக வாய்ப்பு – என்ன காரணம் தெரியுமா?

இதன் காரணமாக நிச்சயம் அந்த 2 அணிகளும் எளிதாக 20 கோடி ரூபாய்க்கு மேல் ரிஷப் பண்டை வாங்க முன் வருவார்கள். ஒருவேளை இப்படி எந்த அணிக்கு அவர் சென்றாலும் அந்த அணியின் கேப்டனாகவும் அவர் மாற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -