தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நவம்பர் எட்டாம் தேதி நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 61 ரெண்டு வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியிருந்தது.
இந்திய அணிக்காக அறிமுகமாக இருக்கும் புதிய வீரர் :
இந்த வெற்றியின் மூலம் இந்த நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கும் வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நவம்பர் 10-ஆம் தேதி இன்று இரவு 8:30 மணிக்கு துவங்குகிறது.
இந்நிலையில் இந்த இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து சுழற்பந்து வீச்சாளரான அக்சர் பட்டேல் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டரான ரமன்தீப் சிங் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏனெனில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய வேளையில் மைதானம் சற்று வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக பார்க்கப்பட்டது. அதே வேளையில் பேட்டிங் வரிசையிலும் இந்திய அணி நல்ல வீரர்களை வைத்துள்ளதால் கீழ் வரிசையில் பெரிதாக விளையாட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
இதன் காரணமாக அக்சர் படேல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரமன்தீப் சிங் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே போன்று ஹார்டிக் பாண்டியா அணியில் இருக்கும் வேளையில் கூடுதலாக அவரைப் போன்ற ஒரு வீரர் அணியில் இருந்தால் அது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : ரச்சின் ரவீந்திரா விடயத்தில் சி.எஸ்.கே அணி செய்தது தவறு.. இந்திய அணிதான் முக்கியம் – உத்தப்பா விமர்சனம்
அப்படி ரமன்தீப் சிங் அணியில் சேர்க்கப்படும் பட்சத்தில் பந்துவீச்சில் மட்டுமின்றி அது பேட்டிங் யூனிட்டில் பலம் சேர்க்கும் என்பதனால் அவர் இன்று அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



