ரச்சின் ரவீந்திரா விடயத்தில் சி.எஸ்.கே அணி செய்தது தவறு.. இந்திய அணிதான் முக்கியம் – உத்தப்பா விமர்சனம்

Uthappa
- Advertisement -

அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. நியூசிலாந்து அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சி.எஸ்.கே அணி அனுமதி கொடுத்திருக்கக்கூடாது :

இதன் காரணமாக எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது. இந்நிலையில் அனுபவம் இல்லாத வீரர்களை வைத்துக்கொண்டு நியூசிலாந்து அணி இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்தியது பலதரப்பட்ட ரசிகர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

- Advertisement -

அதோடு சொந்த மண்ணில் 12 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி இப்படி ஒரு தோல்வியை சந்தித்தது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்தது. இந்த தொடரில் நியூசிலாந்து அணி சார்பாக விளையாடிய ரச்சின் ரச்சின் ரவீந்திரா முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார்.

ஏனெனில் பெங்களூரு நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தியிருந்தார். ஒருவேளை அவர் அந்த சதத்தை அடிக்காமல் இருந்தால் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கிறது. இப்படி ரச்சின் ரவீந்திரா அந்த போட்டியில் சதம் அடிக்க அந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக சிஎஸ்கே அமைத்துக் கொடுத்த பயிற்சி மைதானம் தான் காரணம் என ராபின் உத்தப்பா விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : எப்பொழுதுமே சிஎஸ்கே அணி தங்களது அணியின் வீரர்களை கவனித்துக் கொள்வதில் மிகவும் அக்கறை காட்டும் அது தவறல்ல. ஆனால் ஒரு வெளிநாட்டு வீரர் இந்திய அணியை எதிர்த்து விளையாடும்போது அவருக்கு இதுபோன்ற வசதிகளை செய்துகொடுக்கும் முன்னர் நமது நாடு குறித்த எண்ணம் தான் முதலில் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : 68 ரன்ஸ்.. ஆப்கானிஸ்தானை மடக்கிய வங்கதேசம்.. அப்பாடா 34 வருடம் கழித்து ஒரு வழியாக சாதனை வெற்றி

நான் சிஎஸ்கேவை முற்றிலும் நேசிக்கிறேன். ஆனால் நாடு என்று வரும்போது அனைத்திற்கும் ஒரு கோடு இருக்க வேண்டும். எனவே இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு முன்னதாக வெளிநாட்டு வீரர்களை இப்படி பயிற்சி கொடுத்து தயார்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டாம் என சிஎஸ்கே அணி நிர்வாகத்தை கேட்டுக் கொள்வதாக ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement