ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் சார்ஜாவில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. அந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்ற நிலையில் 2வது போட்டி நவம்பர் ஒன்பதாம் தேதி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் 50 ஓவர்களில் மிகவும் போராடி 252-7 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் நஜ்முல் சான்டோ பொறுப்புடன் விளையாடி 76 (119) ரன்கள் குவித்தார். அவருடன் ஜாகிர் அலி 37, சௌமியா சர்க்கார் 35 ரன்கள் குவித்து கை கொடுத்தார்கள். ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக நாங்கயலியா கரோட் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
வங்கதேசம் வெற்றி:
அவருடன் அல்லாஹ் கசன்பர் ரஷீத் கான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். பின்னர் 253 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு ரகுமானுல்லா குர்பாஸ் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். மற்றொரு துவக்க வீரர் சேதிஃகுல்லா அடல் 39 ரன்களில் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த ஓமர்சாய் 0, கேப்டன் ஷாஹிதி 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
அதே போல மூன்றாவது இடத்தில் நிதானமாக விளையாடிய ரஹமத் ஷா அரை சதமடித்து 52 ரன்கள் எடுத்து சக வீரருடன் ஏற்பட்ட தவறான புரிதலால் ரன் அவுட்டாகி சென்றார். ஆனால் அடுத்ததாக வந்த குல்பதின் நைப் 26, முகமத் நபி 17, ரசித் கான் 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். இறுதியில் 43.3 ஓவரில் ஆப்கானிஸ்தான் 184 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
34 வருடங்கள் கழித்து:
வங்கதேச அணிக்கு அதிகபட்சமாக நசும் அகமது 3, முஸ்தபிசுர் ரஹ்மான் 2, மெஹதி ஹசன் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அதனால் 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வங்கதேசம் 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து ஆப்கானிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளது. அது போக சார்ஜா மைதானத்தில் முதல் முறையாக வங்கதேச அணி ஒரு வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.
இதையும் படிங்க: 103 ரன்ஸ்.. வெ.இ அணியை அசால்ட்டாக நொறுக்கிய பிலிப் சால்ட்.. 21 வயது இங்கிலாந்து வீரர் அபார சாதனை
அந்த மைதானத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் முறையாக வங்கதேசம் விளையாடியது. அப்போது முதல் இந்த போட்டிக்கு முன்பு வரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வங்கதேசம் தோல்வியை மட்டுமே சந்தித்தது. ஆனால் தற்போது ஒருவழியாக 34 வருடங்கள் கழித்து அந்த மைதானத்தில் வங்கதேசம் வெற்றி பதிவு செய்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. இதை அடுத்து இந்த தொடரின் கடைசிப் போட்டி நாளை நடைபெற உள்ளது.



