முக்கியமான அந்த 4 பேரும் விளையாடல. அதனால எங்களுக்கு தான் வெற்றி – ஜிம்பாப்வே வீரர் வார்னிங்

Zimbabwe
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த மூன்று போட்டிகளுமே ஜிம்பாப்வே நாட்டில் உள்ள ஹராரே நகரில் நடைபெற இருக்கின்றன. முதன்மை வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது ஆசிய கோப்பை தொடருக்காக தற்போது தயாராகி வருவதால் கே.எல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

INDvsZIM

- Advertisement -

இதன் காரணமாக இளம் வீரர்களைக் கொண்ட இந்த இந்திய அணியானது இந்த தொடரில் எவ்வாறு விளையாடப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடர் குறித்து பல்வேறு வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் வேளையில் ஜிம்பாப்வே அணியை சேர்ந்த நட்சத்திர வீரரான இன்னொசென்ட் கையா இந்திய அணியை எச்சரிக்கும் விதமாக ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : ஜிம்பாப்வே அணி நிச்சயம் இந்திய அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றும் என்று நம்புகிறேன். தனிப்பட்ட முறையில் இந்த தொடரில் நான் சதம் அடிக்க ஆசைப்படுகிறேன். இந்த தொடரில் நான் சதம் அடிப்பதோடு அதிக ரன்களையும் குவிக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

Shikandar Raza Ban vs ZIM

அதையே என்னுடைய இலக்காக கொண்டு இந்த ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறேன் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் எங்கள் அணிக்கு எதிராக விளையாடாதது எங்களுக்கு சாதகமான ஒரு விடயம்.

- Advertisement -

இதையும் படிங்க : சக்கரையிலிருந்து மாமிசம் வரை எல்லாமே நோ தான். தனது பிட்னஸ் சீக்ரட் குறித்து பேசிய – விராட் கோலி

சீனியர் வீரர்கள் இந்திய அணியில் இல்லை என்றாலும் தற்போது உள்ள இந்திய அணி வலுவானது என்பது எங்களுக்கு தெரியும். இந்திய அணியில் இளம் வீரர்கள் பலர் இருப்பதால் அவர்களை குறைத்து மதிப்பிட மாட்டோம். ஆனாலும் நிச்சயம் இந்த தொடரில் நாங்கள் வெல்வோம் என இன்னசென்ட் கையா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement