நானும் ரோஹித் மட்டும் உலக சாதனையை செய்றோம்.. இம்முறை வங்கதேசம் வேற மாதிரி இருக்கும்.. ஷாகிப்

Shakib Al Hasan
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய பயிற்சி போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. ஜூன் ஒன்றாம் தேதி நியூயார்க் நகரில் நடைபெறும் அந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. பொதுவாகவே சுமாரான அணியாக பார்க்கப்படும் வங்கதேசம் சமீபத்தில் கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் அதன் சொந்த மண்ணில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

அதனால் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்துள்ள வங்கதேசம் இம்முறையும் லீக் சுற்றைத் தாண்டி சூப்பர் 8 தகுதி பெறுமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. அந்த நிலையில் 37 வயதாகும் நட்சத்திர வங்கதேச வீரர் சாகிப் அல் ஹசன் அடுத்த உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. அதே போல 37 வயதாகும் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இதுவே கடைசி டி20 உலகக் கோப்பையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

ஷாகிப் பெருமை:
இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் மட்டுமே 2007 முதல் இதுவரை நடைபெற்ற அனைத்து டி20 உலகக் கோப்பைகளிலும் விளையாடிய வீரர்களாக உலக சாதனை படைத்துள்ளனர். அதை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவிக்கும் ஷாகிப் அல் ஹசன் கடந்த தொடர்களை விட இந்த டி20 உலகக் கோப்பையில் வங்கதேசம் சிறந்த செயல்பாடுகளை கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று தெரிவிக்கும் அவர் 2026 டி20 உலகக் கோப்பையிலும் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் நான் விளையாடத் துவங்கிய போது இவ்வளவு காலம் விளையாடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. 2வதாக நானும் ரோகித் சர்மாவும் மட்டுமே இதுவரை நடைபெற்ற அனைத்து டி20 உலக கோப்பைகளிலும் விளையாடியுள்ளோம்”

- Advertisement -

“அது எனக்கு பெருமையாகும். நான் என்னுடைய நாட்டுக்காக விளையாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த சமயத்தில் இன்னும் ஒரு டி20 உலகக் கோப்பையில் நான் வங்கதேசத்துக்காக சிறப்பாக விளையாடுவேன் என்று நம்புகிறேன். இம்முறை கடந்த தொடர்களை விட வங்கதேசம் சிறப்பாக விளையாடும். என்னுடைய பெயருக்கு பின்னால் எதையும் இருப்பதை நான் பார்க்க விரும்பவில்லை”

இதையும் படிங்க: இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரச்சனையே இல்ல.. அந்த 2 போட்டியை நினைச்சு பாருங்க.. அப்ரிடி கருத்து பற்றி மஞ்ரேக்கர்

“வங்கதேச அணிக்காக இந்த உலகக் கோப்பை வெற்றிகளில் பங்காற்றுவதை மட்டுமே நான் விரும்புகிறேன். உலகக் கோப்பையில் நிறைய வங்கதேச ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். அதை பயன்படுத்தி நாங்கள் நல்ல முடிவுகளை கொடுப்போம்” என்று கூறினார். முன்னதாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராகவும் ஷாகிப் (47*) உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement